செய்தி சேனல்களுக்கான டி.ஆர்.பி கட் : 3 மாதம் நிறுத்தம் செய்யப்படுவதாக BARC அறிவிப்பு!!

15 October 2020, 3:56 pm
BARC Stop- Updatenews360
Quick Share

டிஆர்பி ரேட்டிங் அறிவிப்பு 3 மாதங்களுக்கு நிறுத்தம் செய்யப்படுவதாக பார்க் தெரிவித்துள்ளது.

எந்தெந்த சேனல்களை மக்கள் அதிகம் பார்க்கிறார்கள் என பார்க் வழங்கும் டிஆர்பி ரேட் வாரம் வாரம் வெளியிடப்படும். இந்த டிஆர்பி வைத்து முறைகேட்டில் ஈடுபட்டதாக் ரிபப்ளிக் டிவி உரிமையாளர்களில் ஒருவரான அர்னாப் கோஸ்வாமியிடம் விசாரிக்க உள்ளதாக மும்பை காவல்துறை ஆணையர் பரம் பீர் சிங் தெரிவித்திருந்தார்.

Arnab Goswami to be arrested, Republic TV's bank accounts to be seized?  Mumbai Police Commissioner drops bombshell on TRP scam

ஒவ்வொரு வீட்டிலும் தங்கள் சேனலை தொடர்ந்து ஓட வைத்து , அந்தந்த வீட்டினருக்க சில நூறு ரூபாய் பணம் கொடுத்து டிஆர்பி புள்ளிகளை உயர்த்திக்கொணட்ர்கள் என்பதே ரிபப்ளிக் உள்ளிட்ட சில டிவி நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மும்பை காவல் துறையை இழிவுப்படுத்தும் வகையில் ரிபப்ளிக் டிவி செய்திகளை வெளியிட்டு வருவதாக காவல் ஆணையர் பரம் பீர் சிங் குற்றம்சாட்டியிருந்தார். ஆனால் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை ரிபப்ளிக் டிவி மறுத்துள்ளது. சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண விவகாரத்தில் மும்பை போலீஸ் குறித்து செய்தி வெளியிட்டதற்கு பழி வாங்கும் விதமாக இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக ரிபப்ளிக் டிவி விளக்கம் அளித்திருந்தது.

BARC temporarily suspends weekly ratings of news channels - NewsBharati

மேலும் தாங்கள் தவறு செய்ததாக் பார்க் நிறுவனம் (BARC) நிறுவனம் எதுவும் கூறவில்லை என்றும் ரிபப்ளிக் டிவி தெரிவித்திருந்தது. இந்த நிலையில் செய்தி சேனல்களுக்கான டிஆர்பி ரேட்டிங் அறிவிப்பு 3 மாதங்களுக்கு நிறுத்தம் செய்யப்படுவதாக BARC தெரிவித்துள்ளது.

BARC Rating: TV Audience & Ads Performance Measurements in India

இது குறித்து பார்க் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய மக்கள் எதை பார்க்கிறார்கள் என்பதை உண்மையாகவும் தெளிவாகவும் வெளிப்படுத்தி வருகிறோம். பார்க் தொழில்நுட்பக் குழுவின் மேற்பார்வையின் கீழ் தரத்தை ஆய்வு செய்வதற்காக 8 முதல் 12 வாரங்கள் டிஆர்பி ரேட்டிங் அறிவிப்பு நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 1

0

0