ராணுவத்தினருக்காக கப்பலில் நடைபெற்ற அழகி போட்டி: ‘Mr அழகன்’ பட்டத்தை தட்டிச்சென்ற தமிழக இளைஞர்..!!

Author: Aarthi Sivakumar
29 September 2021, 12:33 pm
Quick Share

சென்னை : கோவாவில் கப்பலில் நடந்த அழகிப் போட்டியில் கிடைத்த நிதியை ராணுவத்தினர் குடும்பத்திற்கு உதவ பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

சமூகத்தில் சிறப்பாக பணியாற்றுவோரை ஊக்குவிக்கவும், சமூக காரணங்களுக்காக நிதி திரட்டவும் கோவாவில் இந்தியன் மீடியா ஒர்க்ஸ் சார்பில், Mr, Mrs, Ms அழகிப்போட்டி கப்பலில் நடைபெற்றது. ஆண்கள், பெண்கள் மற்றும் திருமணமான பெண்கள் என மூன்று பிரிவுகளில் நடந்தது.

இதில், நடிகை ஷெரின் காஞ்ச்வாலா, பாலிவுட் நடிகர் ஷபிர் அலி, நடிகர் பாலாஜி முருகதாஸ், சினேகா நாயர் உள்ளிட்ட பலர் நடுவர்களாகவும், சிறப்பு அழைப்பாளர்களாகவும் பங்கேற்று வெற்றியாளர்களை தேர்வு செய்தனர்.

‘மிஸ்டர் அழகன்’ பட்டத்தை தமிழகத்தை சேர்ந்த பாஸ்கர் தனசேகரும், ‘மிஸ் அழகி’ பட்டத்தை குஜராத்தை சேர்ந்த ராதிகா தேவும், ‘மிஸ்ஸஸ் அழகி’ பட்டத்தை தமிழகத்தை சேர்ந்த ப்ரியா கிஷோரும் வென்றனர்.

வெற்றி பெற்ற மூவரும், துபாய், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட சர்வதேச மாடலிங் தளங்களில், இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை பெற்றுள்ளனர். இந்த அழகிப்போட்டி வாயிலாக கிடைத்த தொகையை கொரோனா காலத்தில் நாட்டுக்காக உழைத்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு உதவும் வகையில் பிரதமரின் பொது நிவாரண நிதிக்கு இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் அளித்துள்ளது.

Views: - 251

0

0