மோடி முன்னிலையில் பாஜகவில் இணைகிறாரா சவுரவ் கங்குலி..? உண்மையை போட்டுடைத்த மேற்குவங்க பாஜக தலைவர்..!

3 March 2021, 8:49 pm
saurav_ganguly_modi_Updatenews360
Quick Share

மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, பாரதீய ஜனதா கட்சித் தலைவர் திலீப் கோஷ், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் சவுரவ் கங்குலி பாஜக கட்சியில் சேருவார் என்று வெளியாகும் ஊகங்களை நிராகரித்தார்.

“இது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. பாஜகவில் இது குறித்து எந்த விவாதமும் இல்லை” என்று திலீப் கோஷ் செய்தியாளர்களிடம் கூறினார். மார்ச் 7’ம் தேதி கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் உரையில் கங்குலி கலந்து கொள்ள வாய்ப்புள்ளது என்ற ஊடக செய்திகளுக்கு மத்தியில் இது வந்துள்ளது.

மேற்கு வங்கத்தில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்பாளர்களின் பெயர்களை கட்சியின் முக்கிய குழு விரைவில் அறிவிக்கும் என்றும் மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் தெரிவித்தார்.

“மேற்கு வங்கத்தில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்பாளர்கள் குறித்து கட்சியின் மைய குழு விவாதித்துள்ளது. இது விரைவில் பெயர்களை அறிவிக்கும்” என்று அவர் கூறினார். மேலும் மாநிலத்தில் நடைபெறவிருக்கும் தேர்தல் பேரணிகளையும் அவர்கள் மதிப்பாய்வு செய்தனர்.

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல்கள் மார்ச் 27 முதல் எட்டு கட்டங்களாக ஏப்ரல் 29’ஆம் தேதி இறுதி சுற்று வாக்களிப்புடன் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 2’ஆம் தேதி நடைபெறும்.

மேற்கு வங்கம் இந்த முறை திரிணாமுல், காங்கிரஸ்-இடது கூட்டணி மற்றும் பாஜகவுடன் ஒரு முக்கோண போட்டியைக் காண வாய்ப்புள்ளது.

Views: - 25

0

0