பாஜக தேர்தல் அலுவலகம் மீது வெடிகுண்டு வீச்சு..! மேற்குவங்கத்தில் திரிணாமுல் கட்சியினர் அடாவடி..!

19 April 2021, 9:20 pm
bengal_bjp_bomb__updatenews360
Quick Share

மேற்குவங்கத்தில், பாஜகவின் தேர்தல் அலுவலகம் மற்றும் வடக்கு 24 பர்கானாவின் பானிஹாட்டியில் உள்ள கட்சித் தொண்டர்கள் தங்கியிருக்கும் இடத்தில் நாட்டு வெடி குண்டுகள் வீசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பாஜக வேட்பாளர் சன்மோய் பானர்ஜி, “திரிணாமுல் கட்சியினர் தேர்தலில் தோல்வியடைவதை அறிந்ததால் இந்த தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். காவல்துறை வெறும் பார்வையாளர்களாகவே செயல்படுகிறது” என்றார்.

அறிக்கையின்படி, குற்றவாளிகள் பைக்குகளில் வந்து, ஐந்து குண்டுகளை பி.டி சாலையில், சோடேபூர், சுதேசி சவுக்கில் உள்ள பாஜக தேர்தல் அலுவலகம் முன் வீசினர். பின்னர் குற்றவாளிகள் மேலும் இரண்டு குண்டுகளை வீசினர். இருப்பினும், ஒரு குண்டு வெடிக்கவில்லை. அதை கர்தாஹா போலீசார் மீட்டனர்.

உள்ளூர் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் இந்த தாக்குதலை நடத்தியதாக பாஜக குற்றம் சாட்டியது. இதனால் ஆத்திரமடைந்த பாஜக தொண்டர்கள் பின்னர் திரிணாமுல் கட்சி அலுவலகத்தை சூறையாடினர்.

தேர்தல் நடக்கும் மேற்குவங்கத்தில், ஆளும் கட்சியினர் தொடர்ந்து இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபட்டு வந்தாலும், போலீசார் பெரிய அளவில் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் சட்டம் ஒழுங்கு நிலை மோசமாக உள்ளது.

இதன் உச்சகட்டமாக கடந்த ஐந்தாம் கட்டத் தேர்தலில், திரிணாமுல் கட்சியினர் துணைராணுவப் படையின் ஆயுதங்களைப் பறித்து, வீரர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் போன்ற சூழ்நிலையை ஏற்படுத்தியதும், பதிலுக்கு கூட்டத்தைக் கலைக்க துணை ராணுவப்படை சுட்டபோது திரிணாமுல் கட்சித் தொண்டர்கள் சிலர் பலியானதும் குறிப்பிடத்தக்கது.

Views: - 81

0

0