எங்கிட்ட மோதாதே! சஃபாரி வாகனத்தை கடித்து இழுத்த பெங்கால் புலி: வைரல் வீடியோ

17 January 2021, 9:55 am
Quick Share

சஃபாரி வாகனம் ஒன்றை, பெங்கால் புலி ஒன்று கடித்து இழுக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இந்த சம்பவம் பெங்களூரு பன்னாட்கட்டா தேசிய உயிரியல் பூங்காவில் நடந்துள்ளது.

இணையத்தில் வைரலாகும் பல விஷயங்கள் நம் கண்களை நம்மாலேயே நம்ப முடியாத வகையில் இருக்கும். அந்த வகையில், பெங்களூருவில் நடந்த சம்பவம் ஒன்று, நெட்டிசன்களை வாய் பிளக்க வைத்துள்ளது. அந்த வீடியோ பெங்களூருவில் இருக்கும் பிரபலமான பன்னார்கட்டா தேசிய உயிரியல் பூங்காவில் எடுக்கப்ட்டுள்ளது.

ஒன்றறை நிமிடம் ஓடும் அந்த வீடியோவில், மிகவும் சக்தி வாய்ந்த பெங்கால் புலி ஒன்று, சுற்றுலா பயணிகள் வந்த சஃபாரி வாகத்தின் பின்பக்கத்தை, தனது வாயில் கடித்து இழுக்கிறது. இதனால், பயணிகள் பயத்தில் உறைந்து போயினர். அந்த நிகழ்வுகளை மற்றொரு வாகனத்தில் இருந்த பயணிகள், வீடியோவாக பதிவு செய்தனர். புலியின் கடித்து இழுத்ததில், சஃபாரியின் பம்பர் பகுதி சேதம் அடைந்தது. அரிய காட்சியான இதனை பயணிகள் வாட்ஸ் அப்பில் தனது நண்பர்களுக்கு பகிர்ந்தனர். அந்த வீடியோவை, மோனா படேல் என்ற டுவிட்டர் பயணி, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட, அதனை நெட்டிசன்கள் வைரலாக்கினர்.

இதுவரை அந்த வீடியோவை 9 ஆயிரம் பேர் பார்த்து வியப்படைந்தனர். பலரும் லைக்ஸ்களை குவித்துள்ளனர். கமெண்ட்ஸ்சில் ஒரு பயனர், ‘அதிக ஆர்வமுள்ள குட்டி’ என பதிவிட, இரண்டாம் பயனர், ‘நேற்று ஒரு சிறுத்தை.. இன்று புலி.. அங்கு என்ன நடக்கிறது’ என பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர், ‘மிகவும் வலுவான புலி, 100 குதிரைத்திறன், ஒரு டைகர் பவருக்கு சமம்’ என பதிவிட்டுள்ளார்.

Views: - 4

0

0