திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் கொலை..! சொந்த கட்சியினரே அடித்துக் கொன்றது அம்பலம்..?

3 August 2020, 10:16 am
west_bengal_police_updatenews360
Quick Share

மேற்கு வங்கத்தின் பாங்குரா மாவட்டத்தில் பெலியாரா கிராமத்தில் நேற்று இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஒருவர் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். 

முன்னாள் பஞ்சாயத்து தலைவரான ஷேக் பாபர் அலி, சனிக்கிழமை இரவு இரு குழுக்களுக்கிடையில் ஆயுத மோதலுக்குப் பின்னர் நேற்று அதிகாலை குற்றவாளிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இறந்தவரின் குடும்பத்தினர் அலி, தங்கள் வட்டாரத்தில் மிகவும் பிரபலமாக இருந்ததால் கட்சியின் போட்டி பிரிவினரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேற்கு வங்க அமைச்சரும் மாவட்ட திரிணாமுல் காங்கிரசின் தலைவருமான சியாமல் சாந்த்ரா, “இந்த கொலையில் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். குற்றச்சாட்டுகளை நான் விசாரிக்கிறேன்” என்றார்.

திரிணாமுல் காங்கிரஸ் எந்தவொரு குற்றவாளிக்கும் ஒருபோதும் தங்குமிடம் கொடுக்கவில்லை என அவர் மேலும் கூறினார்.

முன்னாள் அமைச்சரும் திரிணாமுல் கட்சியின் தலைவருமான ஷியாம் முகர்ஜி அலியின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்து சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று கோரினார்.

இந்த கொலையை அடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் படைகள் குவிக்கப்பட்டுள்ளது.