சிட்டி ப்ளைஓவரில் 299 கிமீ வேகத்தில் சாகசப் பயணம்..! பைக் ரேஸரைப் பந்தாடிய பெங்களூரு போலீஸ்..! (வீடியோ)

10 August 2020, 4:40 pm
Bengaluru_Bike_Race_299KM_Speed_UpdateNews360
Quick Share

பெங்களூரு நகரத்தின் மத்திய குற்றப்பிரிவு (சிசிபி), கிட்டத்தட்ட 300 கி.மீ வேகத்தில் ஒரு ஃப்ளைஓவரில் வேகமாக பைக்கில் வந்த ஒரு நபரைக் கண்டுபிடித்து கைது செய்துள்ளது.

அவர் 299 கி.மீ வேகத்தில் பைக்கை சவாரி செய்யும் வீடியோ ஒன்று சமூக ஊடக தளங்களில் வைரலாகி வந்த நிலையில், அந்த வீடியோவே தற்போது அவருடைய கைதுக்கு வழிவகுத்துள்ளது.

ஆபத்தான வகையில் யமஹா ஸ்போர்ட்ஸ் பைக்கை எலக்ட்ரானிக் சிட்டி ஃப்ளைஓவரில் ஒட்டியதாகக் கூறப்படுகிறது. பெங்களூரு நகர காவல்துறை குற்றவியல் இணை ஆணையர் சந்தீப் பாட்டீல், “பெங்களூரு நகர போலீஸ் ஆபத்தான முறையில் வண்டியோட்டி நபரைக் கைது செய்து, அவருடைய யமஹா 1000 சிசி பைக்கையும் கைப்பற்றியுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே பெங்களூரு நகர காவல்துறையின் ட்விட்டர் கணக்கில், “இந்த மிருகம் எங்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளது. அது இப்போது ஓய்வெடுக்கிறது.” என ட்வீட் வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில், அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்றுகள் காரணமாக ஜூலை 15’ஆம் தேதி விதிக்கப்பட்ட பெங்களூரு நகரில் ஊரடங்கு நாளை முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 15

0

0