பேனட்டில் கத்தியபடி படுத்துக்கிடந்த இளைஞர்.. ஒரு கி.மீ தூரம் காரை நிறுத்தாமல் ஓட்டிச் சென்ற பெண் : ஷாக் வீடியோ!!

Author: Babu Lakshmanan
20 January 2023, 9:57 pm
Quick Share

கார் பேனட்டில் ஒருவர் அலறியபடி இருக்க, பெண் ஒருவர் காரை நிறுத்தாமல் ஓட்டிச் சென்ற சம்பவம் பெங்களூரூவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஞானபாரதி மெயின் ரோட்டில் தர்ஷன் என்பவரின் கார் மீது, பிரியங்கா என்ற பெண் ஓட்டி வந்த கார் மோதியதாகக் கூறப்படுகிறது. இதனால், தர்ஷன் காரில் இருந்து இறங்கி வந்து பார்த்துள்ளார்.

பின்னர், காரில் இருந்தவர்களிடம் பேச அவர் முயன்ற போது, பிரியங்கா அதிவேகமாக காரை ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. ஓடிவிடலாம் என்ற பயத்தில் தர்ஷன் வேகமாக குதித்து காரின் பானெட்டில் ஏறினார் என்று கூறப்படுகிறது.

சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு காரின் பானெட்டில் படுத்தபடி உயிரை காப்பாற்றிக் கொள்ள கூச்சலிட்டுள்ளார். இதைக் கண்ட வாகன ஓட்டிகள், அந்தக் காரை சத்தம் போட்டவாறே துரத்திச் சென்று மடக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இதையடுத்து, காரை ஓட்டிச்சென்ற அந்த பெண், அவரது கணவர் மற்றும் மேலும் ஒருவர் மீது கொலை முயற்சி மற்றும் சதி முயற்சி ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே, பெங்களூரூவில் 71 வயது முதியவரை இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் இழுத்துச் சென்ற சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 106

0

0