டாட்டா பவர் நிறுவனத்திடம் இழப்பீடு பெற பெஸ்ட் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் வலியுறுத்தல்….!!

7 November 2020, 11:59 am
tata power - updatenews360
Quick Share

மும்பையில் கடந்த மாதம் 8 மணி நேரம் தொடர் மின்வெட்டு ஏற்பட்டதற்கு டாட்டா பவர் நிறுவனத்திடம் இழப்பீடு பெற பெஸ்ட் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த அக்டோபர் மாதம் 12ம் தேதி மும்பையில் 8 மணி நேர தொடர் மின்வெட்டு ஏற்பட்டது. மும்பையில் நுகர்வோருக்கு மின்சாரம் வழங்கும் பெஸ்ட் நிறுவனம் டாட்டா பவர் நிறுவனத்திடம் இருந்து மின்சாரம் பெறுகிறது.

இந்நிலையில், மின்தொகுப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 8 மணி நேர தொடர் மின்வெட்டு ஏற்பட்டது. சராசரியாக மாதம் 2,500 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் பெஸ்ட் நிறுவனத்திற்கு மின்வெட்டால் ரூ.15 கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால், டாட்டா பவர் நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என பெஸ்ட் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Views: - 18

0

0