பாரத் பந்த் எதிரொலி : திருப்பதியில் வெளிமாநில பேருந்துகள் இயக்கப்படாததால் பக்தர்கள் அவதி!!

Author: Udayachandran RadhaKrishnan
27 September 2021, 10:08 am
Andhra Bus stop -Updatenews360
Quick Share

ஆந்திரா : பாரத் பந்த் காரணமாக உள்ளுர் பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையல் வெளி மாநில பேருந்துகள் இயக்கப்படாததால் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் அவதியடைந்துள்ளனர்.

வேளாண் சட்டத்தை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம் நடைபெற்று வருகிறது குறிப்பாக ஆந்திராவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஆந்திராவில் உள்ள பல்வேறு கட்சியினர் இதனை எதிர்த்து இன்று காலை 6 மணி முதல் சாலைகளில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சியினர் வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் செல்லக்கூடிய பேருந்துகள் இயக்கப்படவில்லை.

திருமலை திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லக்கூடிய பேருந்து மட்டும் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. இன்று மதியம் 2 மணி வரை பேருந்துகள் இயக்கப்பட ஆந்திர மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆந்திர மாநிலத்தில் பல்வேறு தொழிற்சாலைகளில் மத்திய அரசு கையகப்படுத்துவது குறித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் திருப்பதி திருமலைக்குச் செல்லும் பக்தர்களுக்கு எந்த பாதிப்புமின்றி பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் வெளிமாநில மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் இயக்கப்படாததால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Views: - 120

0

0