அமெரிக்க பல்கலைக்கழகத்துடன் இணைந்து கொரோனாவுக்கு புதிய தடுப்பூசி கண்டறிந்த பாரத் பயோடெக்..!

8 January 2021, 2:19 pm
Covaxin_UpdateNews360
Quick Share

கொரோனா வைரஸை அழிக்கும் கோவாக்சின் தடுப்பூசிக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரலின் (டி.சி.ஜி.ஐ) அவசரகால பயன்பாட்டு அங்கீகார ஒப்புதலை பாரத் பயோடெக் நிறுவனம் பெற்றுள்ள நிலையில், கொரோனா வைரஸிற்கான அதன் புதிய இன்ட்ரனாசல் மருந்தின் முதற்கட்ட மனித பரிசோதனைகளை வரும் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

கோவாக்சின் தவிர, பாரத் பயோடெக் மற்றொரு தடுப்பூசியை உருவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக செயின்ட் லூயிஸில் உள்ள வாஷிங்டன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசினுடன் இணைந்து சிம்ப்-அடினோவைரஸ் (சிம்பன்சி அடினோவைரஸ்) எனும் மற்றொரு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

“பிபிவி 154 (இன்ட்ரானாசல் கொரோனா தடுப்பூசி), நச்சுயியல், நோயெதிர்ப்புத் திறன் போன்ற ஆய்வுகளுக்கான முன்கூட்டிய சோதனை முடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகள் அமெரிக்காவிலும் இந்தியாவிலும் நடத்தப்பட்டுள்ளன. முதலாம் கட்ட மனித மருத்துவ பரிசோதனைகள் பிப்ரவரி-மார்ச் 2021 இல் தொடங்கும்.” பாரத் பயோடெக் தெரிவித்துள்ளது.

முதலாம் கட்ட மனித மருத்துவ பரிசோதனைகள் இந்தியாவில் நடத்தப்படும் என்று பாரத் பயோடெக் மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த சோதனைகள் செயிண்ட் லூயிஸ் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி மற்றும் சிகிச்சை மதிப்பீட்டு பிரிவில் நடத்தப்படும் என்று நிறுவனத்தின் வட்டாரங்கள் தெரிவித்தன, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பா தவிர அனைத்து சந்தைகளிலும் தடுப்பூசி விநியோகிக்கும் உரிமையை பாரத் பயோடெக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0