கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானதா..? முதல்கட்ட ஆய்வுகளை வெளியிட்ட பாரத் பயோடெக்

14 August 2020, 8:13 pm
covaxin - updatenews360
Quick Share

டெல்லி: கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என முதல் கட்ட பரிசோதனை முடிவுகளில் தெரிய வந்துள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்து உள்ளது.

உலகையே இன்னமும் விடாது துரத்தும் கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்துகளை கண்டறியும் பணிகளில் முன்னணி நாடுகள் களம் இறங்கி உள்ளன. அதற்கான ஆராய்ச்சிகள் உச்சக்கட்டத்தில் இருக்கிறது.

இந் நிலையில் கொரோனா தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்து விட்டதாக ரஷ்யா சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. தமது மகளுக்கு அந்த மருந்தை செலுத்தி பார்த்ததாகவும் அவர் ஆரோக்கியமாக உள்ளார் என்றும் அதிபர் புடின் அறிவித்தார்.

ஆனாலும் அந்த தடுப்பு மருந்தில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் பற்றி உலக சுகாதார நிறுவனம் கேள்வி எழுப்பியது. இந் நிலையில், இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம், கோவாக்சின் என்ற தடுப்பூசி மருந்தை கண்டறிந்து உள்ளது.

இந்த மருந்தானது, 375 தன்னார்வலர்களுக்கு முதல்கட்டமாக செலுத்தப்பட்டு உள்ளது. அதன் முடிவுகள் பற்றி பயோடெக் நிறுவனம் கூறி உள்ளதாவது: கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானதாக கண்டறியப்பட்டு இருக்கிறது.

தன்னார்வலர்களிடம் இருந்து எந்தவிதமான குறைபாடுகளும் கண்டறியப்படவில்லை. 2வது கட்ட சோதனையில் தடுப்பூசியின் பயன் பற்றி முழுமையாக அறியப்படும் என்று கூறி உள்ளது.

Views: - 45

0

0