4வது முறையாக பீகார் முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் நிதிஷ்குமார் : பாஜக சார்பில் 2 துணை முதலமைச்சர்களா..?

16 November 2020, 10:04 am
Nithish_UpdateNews360
Quick Share

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், 4வது முறையாக முதலமைச்சராக இன்று நிதிஷ்குமார் பதவியேற்கிறார்.

அண்மையில் நடந்த பீகார் சட்டப்பேரவை தேர்தல் வாக்குகள் கடந்த 10ம் தேதி எண்ணப்பட்டது. பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், பாஜக தலைமையிலான கூட்டணி கட்சி 125 இடங்களை வென்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. பாஜக 74 தொகுதிகளையும், ஐக்கிய ஜனதா தளம் 43 தொகுதிகளையும் கைப்பற்றின. நிதிஷ்குமார் கட்சியை விட பாஜக அதிக இடங்களை கைப்பற்றியதால், நிதிஷ்குமாருக்கு மீண்டும் முதலமைச்சர் பதவி கிடைக்குமா..? என்ற கேள்வி எழுந்தது.

ஆனால், இதற்காக நடைபெற்ற ஆலோசனைக் கூடடத்தில், பீகார் முதல்வராக நிதிஷ்குமார் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். துணை முதலமைச்சராக சுஷில் குமார் மோடியும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், பீகார் மாநிலத்தில் 4வது முறையாக முதலமைச்சராக நிதிஷ்குமார் இன்று மாலை 4.30 மணிக்கு பதவியேற்க இருக்கிறார். பாஜகவை சேர்ந்த 2 பேர் துணை முதல்வர்களாக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 38

0

0