“இதுவே எனது கடைசித் தேர்தல்”..! ஷாக் அறிவிப்பை வெளியிட்ட பீகார் முதல்வர்..!

5 November 2020, 4:53 pm
Nitish_kumar_UpdateNews360
Quick Share

பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதீஷ் குமார், பீகார் சட்டமன்றத் தேர்தல் 2020 தனது கடைசி தேர்தலாக இருக்கும் என்று அதிரடியாக அறிவித்தார். பீகார் தேர்தல் 2020’இன் மூன்றாம் கட்ட தேர்தலுக்காக பிரச்சாரம் செய்தபோது, நிதீஷ் குமார் ஐக்கிய ஜனதா தளத்திற்கு வாக்களிக்குமாறு முறையிட்டார். 

பூர்னியாவில் பிரச்சாரம் செய்யும் போது அவர் இந்த பெரிய அறிவிப்பை வெளியிட்டார். முன்னெப்போதும் இல்லாத வகையில், பீகாரில் தனது பிரச்சாரத்தின் போது பல எதிர்ப்புக்களை நிதீஷ் குமார் எதிர்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது.

நிதீஷ் குமாரின் கருத்துக்களுக்கு பதிலளித்த லோக் ஜான்ஷக்தி கட்சி தலைவர் அஜய் குமார், நிதீஷ் குமாரின் ஓய்வுக்கு எப்போதும் தாங்கள் ஆதரவாக இருப்பதாகக் கூறினார். ஐக்கிய ஜனதா தளத்தின் முதலமைச்சர் முகமாக இருக்கக்கூடிய ஒரு புதிய முகத்தை நிதீஷ் குமார் அறிவித்திருக்க வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.

பீகார் தேர்தல் 2020 தனது கடைசி தேர்தலாக இருக்கும் என்று அறிவித்த நிதீஷ் குமாருக்கு ராஷ்டிரிய லோக் சம்தா கட்சி தலைவர் உபேந்திர குஷ்வாஹாவும் நன்றி தெரிவித்தார். நிதீஷ் குமாரை ஆசீர்வதித்து அரசியலில் இருந்து ஓய்வு பெறுமாறு கேட்டுக்கொண்டார்.

நிதீஷ் குமாரின் திடீர் அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ், இது ஒரு அரசியல் அறிக்கையாக இருக்கலாம் என்றும், வாக்காளர்களை கவரும் வகையில் ஐக்கிய ஜனதா தளத் தலைவர் உணர்ச்சிப்பூர்வ அரசியலை விளையாட முயற்சிக்கிறார் என்றும் கூறியுள்ளது.

காங்கிரஸ் பீகார் தலைவர் மதன் மோகன் ஜா, தான் நிதீஷ் குமார் தேர்தலில் தோல்வியடையப் போவதை உணர்ந்துள்ளதால், இந்த அறிவிப்பை வெளியிட்டதாகக் கூறினார். தனது கட்சியை நோக்கி வாக்காளர்களை ஈர்ப்பதற்காக நிதீஷ் குமார் இதுபோன்ற சூழ்ச்சியில் ஈடுபடலாம் என்றும் அவர் கூறினார்.

Views: - 23

0

0