தேர்தல் பேரணியில் பீகார் முதல்வர் மீது வெங்காயம் வீச்சு..! நிதீஷ் குமாரின் பதிலால் “ஷாக்”..!

3 November 2020, 6:55 pm
Nithish_UpdateNews360
Quick Share

பீகாரின் மதுபானி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பேரணியில் உரையாற்றும் போது முதலமைச்சர் மற்றும் ஜனதா தளம் கட்சியின் தலைவரான நிதீஷ்குமார் மீது வெங்காயம் வீசப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

மதுபானி மாவட்டத்தில் தேர்தல் பேரணியில் உரையாற்றும் போது நிதீஷ் குமார் வேலைவாய்ப்பு குறித்து பேசிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பீகார் முதல்வர் மக்களிடையே உரையாற்றும் போது, ​​கூட்டத்தில் இருந்து ஒருவர் வெங்காயத்தை நிதீஷ் குமாரை நோக்கி வீசினார். ஆனால் அது அவர் மீது படவில்லை. அமைதியான நபர் என்று அறியப்படும் நிதீஷ் குமார், இதையடுத்து தனது உரையை நிறுத்திவிட்டு, யார் வேண்டுமானாலும் தன்னிடம் எதை வேண்டுமானாலும் எறியலாம் என்றும் தான் அதை வரவேற்பதாகவும் கூறினார்.

நிதீஷ் குமார் மீது வெங்காயம் வீசப்பட்டதால், அவரது பாதுகாப்பு வீரர்கள் உடனடியாக அவரை சூழ்ந்து கொண்டனர்.

இதையடுத்து மீண்டும் பேசிய அவர் ஆட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால், அனைவருக்கும் மாநிலத்தில் வேலை கிடைப்பதை தனது அரசாங்கம் உறுதி செய்யும் என்றும், சம்பாதிக்க யாரும் பிற மாநிலங்களுக்கு குடிபெயர வேண்டியதில்லை என்றும் நிதீஷ் குமார் வாக்காளர்களுக்கு உறுதியளித்தார்.

குறிப்பிடத்தக்க வகையில், பீகார் தேர்தலின் போது பிரச்சாரத்தின்போது நிதீஷ் குமார் தொடர்ந்து எதிர்ப்புக்களை எதிர்கொண்டுள்ளார். முன்னதாக, அக்டோபர் 26 அன்று முசாபர்பூர் மாவட்டத்தில் சக்ராவில் சில எதிர்ப்பாளர்களால் நிதீஷ் குமார் மீது ஒரு செருப்பு வீசப்பட்டது.

மற்றொரு சம்பவத்தில், சந்தன் குமார் திவாரி என அடையாளம் காணப்பட்ட ஒருவர் அக்டோபர் 11 அன்று பாட்னாவில் ஒரு நிகழ்ச்சியின் போது பீகார் முதலமைச்சரை நோக்கி ஒரு செருப்பை வீசினார்.

இந்நிலையில் தற்போது மூன்றாவது சம்பவமாக வெங்காயம் வீசப்பட்டுள்ளதால், மாநிலத்தில் அவருக்கு எதிர்ப்புகள் அதிகமாகி வருவது போல் ஒரு தோற்றம் உருவாகியுள்ளது.

Views: - 18

0

0