பீகாரில் ‘கிங் மேக்கர்’ ஆக பாஸ்வான் கட்சி திட்டம் : பாஜக கூட்டணியில் மாற்றம் தேர்தலில் யாரை பாதிக்கும்?

Author: Udayachandran
5 October 2020, 9:30 pm
Bihar Election - Updatenews360
Quick Share

சென்னை: நாடே பெரிதும் எதிர்பார்க்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணியில் இருந்து ராம்விலாஸ் பாஸ்வானின் லோக்ஜனசக்தி வெளியேறித் தனித்துப் போட்டியிடுவது முக்கிய திருப்பமாகக் கருதப்படுகிறது.

Rashtriya Janata Dal: Electoral Performance, Chief Ministers-Wishusucess

ஒருவேளை யாரும் ஆட்சி அமைக்க முடியாத வகையில் தொங்கு சட்டமன்றம் அமைந்தால் அப்போது யார் அமைப்பது என்பதை முடிவு செய்யும் ‘கிங்மேக்கர்’ என்று பாஸ்வானின் கட்சி உருவாகலாம் என்ற வாய்ப்பும் இருக்கிறது.

தேர்தல் முடிவுகளில் இது எந்தவிதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அரசியல் விமர்சகர்கள் கூர்ந்து கவனித்துவருகிறார்கள். பெரும்பாலான தொகுதிகளில் ஆளும் ஐக்கிய ஜனதாதளத்தின் வாக்குகளைப் பிரித்தால் அந்தக் கட்சி தோற்கவும் வாய்ப்பு ஏற்படும். பெரும்பாலான இடங்களில் ஐக்கிய ஜனதாதளம் தோற்றால் அதனுடன் இணைந்து ஆட்சி அமைக்க முடியாத நிலைக்கு பாஜக தள்ளப்படலாம். இது லாலுபிரசாத் யாதவின் ராஷ்டிரீய ஜனதாதளம் ஆட்சி அமைக்கும் சூழலை உருவாக்கலாம்.

RJD supremo Lalu Prasad Yadav tests negative for COVID-19- The New Indian  Express

லோக் ஜனசக்தியை எதிர்ப்பை மீறி ஆளும் ஐக்கிய ஜனதா தளம் பெரும்பாலான தொகுதிகளில் வென்றால் மீண்டும் நிதீஷ்குமாரின் ஆட்சி அமையலாம். யாருக்கும் பெரும்பான்மை இல்லையென்றால் அடுத்த ஆட்சியை பாஸ்வானின் கட்சியே தீர்மானிக்கலாம்.

Ram Vilas Paswan Age, Wife, Caste, Children, Family, Biography & More »  StarsUnfolded

நிதீஷ்குமாருக்கு எதிரான ஓட்டுகள் எதிர்க்கட்சியான லாலுபிரசாத் கட்சிக்குப் போகாமல் அதை பாஸ்வானின் கட்சி பிரிப்பதால் ஆளும் கூட்டணி மீண்டும் வெற்றிபெறும் வாய்ப்பும் இருக்கிறது.
தொடர்ந்து நிதீஷ்குமாரை லோக் ஜனசக்தி விமர்சித்து வந்தாலும் இரு கட்சிகளுக்கு இடையே பாஜக சமரசம் செய்துவைக்கும் என்று கருதப்பட்டது.

ஆனால், முதல்வர் நிதீஷ்குமாரை மீண்டும் முதல்வராக்க வாக்குக் கேட்க முடியாது என்று பாஸ்வானின் கட்சியை வழிநடத்திவரும் ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான் உறுதியாக இருந்ததால் தனித்துப் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.

Shelter home case: Bihar Assembly rocked by demands for resignation of Nitish  Kumar

பாஜக போட்டியிடும் தொகுதிகளில் லோக் ஜனசக்தி போட்டியிடாது என்று அறிவித்துள்ள சிராக், மத்தியில் பாஜக ஆட்சியில் தமது கட்சி தொடர்ந்து பங்குவகிக்கும் என்று கூறியுள்ளார். தேர்தலுக்குப் பின் பாஜக ஆட்சி அமையவும் தமது கட்சி ஆதரவு தெரிவிக்கும் என்றும் நிதீஷ்குமாரை ஆதரிக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Chirag Paswan elected president of Lok Janshakti Party

பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வருவதில் சிக்கல் வருமா அல்லது எதிர்க்கட்சிகளுக்குப் போகும் வாக்குகளை பாஸ்வான் கட்சி பிரிக்குமா என்பதைப் பொறுத்து தேர்தல் முடிவுகள் அமையும்.
எதிர்க்கட்சிக் கூட்டணியிலும் இடங்கள் ஒதுக்குவதில் சிக்கல்கள் தீர்க்கப்பட்டு மொத்தமுள்ள 243 இடங்களில் பெரும்பான்மையான 144 இடங்களில் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவின் தலைமையிலான ராஷ்டிரீய ஜனதா தளம் போட்டியிடவும் 70 தொகுதிகளில் காங்கிரசும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 19 தொகுதிகள் இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்) கட்சிக்கும் 6 இடங்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் 4 தொகுதிகள் மார்க்ஸிஸ்ட் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கொரோனாக் காலத்திலும் அதைத் தொடர்ந்து ஊரடங்குக் காலத்திலும் நாடு முழுவதும் பாதிப்பு ஏற்பட்ட பிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் பீகார் சட்டமன்றத் தேர்தல் இந்திய அரசியலில் கொரோனா ஏற்படுத்திய மாற்றங்களைக் காட்டுவதாக அமையும்.

Bihar election 2020: How both NDA and Mahagathbandhan are riddled in seat  sharing blues weeks before polls - Nex News

இதைத் தொடர்ந்து வரும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடனும் காங்கிரசுடனும் கூட்டணி அமைக்கும் கட்சிகளை பீகார் தேர்தல் முடிவுகள் பாதிக்கும். பீகாரில் வெற்றிபெற்றால் வலிமையான நிலையில் பாஜக தமிழகத்தில் களம் இறங்கும். கூட்டணி இட ஒதுக்கீடுகளிலும் கடுமையான பேரத்தை மேற்கொள்ளும். காங்கிரஸ் வெற்றிபெற்றாலும் இதுபோல்தான் நடந்துகொள்ளும்.

Views: - 44

0

0