பீகார் சட்டமன்றத் தேர்தல்..! கட்சித் தலைவரின் தேர்தல் பிரச்சாரத்தில் மீண்டும் சரிந்து விழுந்த மேடை..! (வீடியோ)

31 October 2020, 6:23 pm
stage_collapse_updatenews360
Quick Share

பீகார் சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வரும் நிலையில், ஜன் அதிகார் கட்சித் தலைவர் ராஜேஷ் ரஞ்சன் எனும் பப்பு யாதவிற்காக அமைக்கப்பட்ட மேடை மற்றும் கூடாரம், இன்று முசாபர்பூரின் மினாபூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற பேரணியில் பப்பு யாதவ் உரையாற்றிக் கொண்டிருந்தபோது சரிந்தது. 

கூட்டம் அதிகமாக இருந்ததால் மேடை சரிந்து விழுந்ததாக கூறப்பட்டுள்ளது. மேடை திடீரென சரிந்து விழுந்ததால், மேடையில் இருந்தவர்கள் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 2015’ஆம் ஆண்டில், பரிஹார் சட்டமன்றத் தொகுதியின் கீழ் உள்ள நாரங்கா கிராமத்தில் ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, ஒரு கட்டத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் இதே பப்பு யாதவ் சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில், தற்போது அவருக்கு மீண்டும் இதே போன்ற ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே 2020 பீகார் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது மேடை சரியும் சம்பவங்களில் இது மூன்றாவதாகும்.

முன்னதாக கடந்த வியாழக்கிழமை, ஜேல் சட்டசபை தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் மஷ்கூர் அகமது உஸ்மான் தர்பங்காவில் பேரணியில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது திடீரென மேடை சரிந்து விழுந்தது.

மேலும் சம்பாரனில் உள்ள பாகாஹி தியோராஜில் நடந்த காங்கிரஸ் பேரணியின் போது, மற்றொரு மேடை சரிந்து விழுந்ததால், காங்கிரஸ் தலைவர்கள் இம்ரான் பிரதாப்கரி மற்றும் அகிலேஷ் சிங் ஆகியோருடன் மேடையில் இருந்த பல தொண்டர்களும் கீழே விழுந்தனர்.

Views: - 14

0

0

1 thought on “பீகார் சட்டமன்றத் தேர்தல்..! கட்சித் தலைவரின் தேர்தல் பிரச்சாரத்தில் மீண்டும் சரிந்து விழுந்த மேடை..! (வீடியோ)

Comments are closed.