நிதீஷ் குமாரின் 15 ஆண்டு கால ஆட்சிக்கு முடிவு..? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பால் கலக்கம்..!

7 November 2020, 8:38 pm
Nitish_Kumar_UpdateNews360I
Quick Share

பீகாரில் தேர்தல் முடிந்து விட்ட நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஷ்வி யாதவ் தனிப்பெரும் தலைவராகவும் அடுத்த முதல்வராகவும் வருவார் என தெரிய வந்துள்ளது.

ஆக்சிஸ் மை இந்தியா எக்ஸிட் வாக்கெடுப்பு கணிப்புகளின்படி, மகாகத்பந்தனின் முதல்வர் முகமாக இருக்கும் தேஜஷ்வி, அடுத்த முதலமைச்சராக வருவார் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த கருத்துக் கணிப்பில் பீகார் முதல்வர் பதவியில் தேஜஷ்வி யாதவைப் பார்க்க விரும்புவதாக 44 சதவீதம் பேர் பதிலளித்தனர். அதே நேரத்தில் 35 சதவீதம் பேர் மட்டுமே நிதீஷ் குமார் மீண்டும் முதல்வர் பதவியில் அமர வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான் முதல்வர் பதவிக்கு வர 7 சதவீத மக்கள் விரும்புகின்றனர். மறுபுறம் 4 சதவீதம் பேர் ராஷ்டிரிய லோக் சம்தா கட்சியின் உபேந்திர குஷ்வாஹாவை முதல்வர் பதவியில் காண விரும்புகிறார்கள்.

மேலும் ஒட்டுமொத்தமாக தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட மகாகத்பந்தன் கூட்டணி, பெரும்பாலான இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் என்று கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன.

இதற்கிடையே சி-வாக்காளர் கருத்து கணிப்பு, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 116 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் மகாகத்பந்தன் 120 இடங்களைப் பெறும் என்று கூறியுள்ளது. 243 இடங்கள் கொண்ட பீகார் சட்டமன்றத்தில் லோக் ஜனசக்தி ஒரு இடத்தையும் மற்ற 6 இடங்களை சுயேட்சைகளும் வெல்லக்கூடும் என சி-வோட்டர் தெரிவித்துள்ளது.

இந்த கருத்துக் கணிப்புகள் மூலம் 15 ஆண்டுகாலம் முதல்வராக நீடித்த நிதீஷ் குமாரின் ஆட்சி முடிவுக்கும் வருவது போல் தோற்றமளிக்கும் நிலையில், வரும் செவாய்க்கிழமை உண்மை நிலை தெரிந்து விடும்.

Views: - 26

0

0