செப்டம்பர் 6 வரை ஊரடங்கு நீட்டிப்பு..! அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது பீகார் அரசு..!
17 August 2020, 2:50 pmபீகாரில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கை செப்டம்பர் 6 வரை நீட்டிக்க, பீகார் அரசு இன்று முடிவு செய்தது. செப்டம்பர் 6’ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் மாநிலத்தில் நடைமுறையில் இருக்கும் என்று மாநில உள்துறை அறிவிப்பு வெளியிட்டது.
மாநில அரசின் உத்தரவின்படி, அரசு மற்றும் தனியார் உட்பட அனைத்து அலுவலகங்களும் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படும். ரயில் மற்றும் விமான சேவைகள் செயல்படும். அனைத்து கல்வி நிறுவனங்களும் மத இடங்களும் மூடப்பட்டிருக்கும்.
அந்த அறிக்கையில், ” பீகார் மாநிலத்தில் கொரோனாவின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, அதிகாரங்களைப் பயன்படுத்துவதில், மேற்கண்ட அறிவுறுத்தல்கள் உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்டது. உள்துறை அமைச்சக உத்தரவின் தொடர்ச்சியாக, ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் 06.09.2020 வரை நடைமுறையில் இருக்கும்.” எனத் தெரிவித்துள்ளது.
முன்னதாக, பீகார் அரசாங்கம் ஆகஸ்ட் 16 வரை ஊரடங்கை நீட்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பீகாரில் தற்போது வரை 1,03,383 கொரோனா பாதிப்புகள் பீகாரில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.