ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேருக்கு தூக்கு..! 4 பேருக்கு ஆயுள்..! கள்ளச் சாராய வழக்கில் பீகார் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

6 March 2021, 8:29 pm
hanging_updatenews360
Quick Share

2016’ல் பீகாரின் கோபால்கஞ்சில் நடந்த கஜுர்பானி கள்ளச் சாராய பலி தொடர்பாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை சிறப்பு கலால் நீதிமன்றம் அறிவித்தது.

கோபால்கஞ்சில் கள்ளச் சாராயம் குடித்து 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மற்றும் இரண்டு பேருக்கு நிரந்தரமாக பார்வை தெரியாமல் போனது.

இந்த வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேருக்கு தூக்குத் தண்டனை விதித்ததோடு, நான்கு பெண்களுக்கும் நீதிமன்றம் கடுமையான ஆயுள் தண்டனை விதித்துள்ளது. நான்கு பெண்களுக்கும் தலா ரூ 10 லட்சம் அபராதமும் விதித்துள்ளது.

குற்றவாளிகளுக்கு பீகார் தடை மற்றும் கலால் சட்டம் 2016’இன் கீழ் நீதிபதி தண்டனை விதித்தார்.

“எனது அறிவைப் பொறுத்தவரை, மாநிலத்தில் ஒரே ஒரு வழக்கில் இவ்வளவு பேருக்கு மரண தண்டனை வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். தண்டனை வழங்கப்பட்ட நிலையில், பெரிய அளவில் காவல்துறையினர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். அதே நேரத்தில் அனைத்து குற்றவாளிகளும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.” என பீகார் கூடுதல் டிஜிபி ஜிதேந்திர குமார் தெரிவித்தார்.

இந்த வழக்கில் டவுன் காவல் நிலையத்தில் தாக்கல் செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரில் பதினான்கு பேர் பெயரிடப்பட்டனர்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் சட்டு பாசி, நாகினா பாசி, கனஹையா பாசி, ராஜேஷ் பாசி, லல்பாபு பாசி, சஞ்சய் சவுத்ரி, சனோஜ் பாசி, ரஞ்சய் சவுத்ரி மற்றும் முன்னா சவுத்ரி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஆயுள் தண்டனை பெற்ற பெண்கள் லால்கரி தேவி, இந்தூ தேவி, கைலாஷோ தேவி மற்றும் ரீட்டா தேவி ஆவர்.

அரசு வக்கீல் தியோ வான்ஷ் கிரி கூறுகையில், குற்றவாளிகள் அனைவரும் கஜுர்பன்னியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர் என்கிறார். குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் கரண் பாசி விசாரணையின் போது இறந்துவிட்டார்.

2016’இல் கோபால்கஞ்சில் மகாவீர் அகாரா மேளா நடந்து கொண்டிருந்தபோது இந்த சோகமான சம்பவம் நடந்தது. பின்னர், சட்டவிரோத மதுபானங்களை தயாரிப்பதற்காக வைத்திருந்த குறைந்தது 1,000 லிட்டர் ஸ்பிரிட்டையும் போலீசார் மீட்டனர்.

பறிமுதல் செய்யப்பட்ட ஸ்பிரிட் மெத்தனால் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதை மனிதர்கள் நுகர்ந்தால் விஷம் என்று சிறப்பு அரசு வக்கீல் ரவி பூஷண் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார்.

Views: - 1

0

0