உடைந்து போன நிதீஷ் குமாரின் பிம்பம்..! அடுத்து என்ன செய்யப்போகிறது பாஜக..?

10 November 2020, 9:10 pm
nitishkumar_narendramodi_updatenews360
Quick Share

கடந்த 15 ஆண்டுகளாக பீகாரில் நிதீஷ்குமார் கொண்டிருந்த பெரிய கட்சி எனும் பிம்பத்தை தற்போது பாரதீய ஜனதா கட்சி தனதாக்கிக் கொண்டுள்ளது. ஆனால் எண்ணிக்கை எப்படியிருந்தாலும், கூட்டணி அரசு நிதீஷ் தலைமையிலேயே செயல்படும் என வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பே, பாஜக அறிவித்தது. 

பாஜக தனது வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆனால், ஐக்கிய ஜனதா தளத்தை விட அதிக இடங்களை வெல்லும் சூழல் உள்ளதால், வரக்கூடிய ஐந்து ஆண்டு கூட்டணி ஆட்சியில், முதல்வர் பதவியை பங்கிட்டுக்கொள்ள அழுத்தம் கொடுக்கும் என பரவலாக பேசப்படுகிறது.

இதுவரையிலான போக்குகளின்படி, பாஜக 76 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதே நேரத்தில் ஐக்கிய ஜனதா தளம் வெறும் 41 இடங்களை மட்டுமே பெரும் நிலையில் உள்ளது. எண்களைப் பொறுத்தவரை, பாஜக தனது 2015’ஆம் ஆண்டின் எண்ணிக்கையை விட பெரிய லாபங்களை ஈட்டியுள்ளது மற்றும் ஐக்கிய ஜனதா தளம் களத்தை இழந்துள்ளது. 2015’இல் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஒருவருக்கொருவர் தேர்தலில் எதிர்த்து போட்டியிட்டு முறையே 71 மற்றும் 53 இடங்களை வென்றன.

இந்த தேர்தல் முடிவுகளில் ஒன்று தெளிவாக உள்ளது. பீகாரில் பாஜக அரசியல் ரீதியாக பல லாபங்களை ஈட்டியுள்ளது. ஐக்கிய ஜனதா தளத்தை விட அதிகமான லாபத்தைப் பெற பாஜகவுக்கு மக்கள் பெருமளவில் வாக்களித்துள்ளனர்.

முந்தைய தேர்தல்களில் பாஜகவும் ஐக்கிய ஜனதா தளமும் ஒன்றாக போட்டியிட்டபோது, ​​ஐக்கிய ஜனதா தளம் ஒவ்வொரு முறையும் தனது ஆதிக்கத்தை வைத்திருந்தது. 2005 அக்டோபர் தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம் 88 இடங்களையும், பாஜக 54 இடங்களையும் வென்றது. 2010’இல், ஐக்கிய ஜனதா தளம் 115 இடங்களை வென்றதன் மூலம் அதன் செயல்திறனை மேம்படுத்தியது. அப்போது பாஜக 91 இடங்களை கைப்பற்றியது.

பாஜகவில் தலைமைக்கு பஞ்சம்
ஆனால் பாஜக எப்போதும் நிதீஷிடம் இணைந்திருப்பதற்குக் காரணமாக, தனக்கென ஒரு தலைமைக்கான முகம் இல்லாதது தான் எனக் கூறப்படுகிறது. துணை முதல்வராக உள்ள பாஜகவின் சுஷில் குமார் மோடி வெகுஜன மக்களின் ஆதரவு கொண்ட அரசியல்வாதி அல்ல.

மேலும், முதல்வராக அவரை முன்வைப்பதில் கட்சி அணிகளுக்குள் வேறுபாடுகள் உள்ளன. நிதீஷின் பெயரில் பாஜக எப்போதும் உறுதியாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். 2015’ஆம் ஆண்டில், பாஜகவும் ஐக்கிய ஜனதா தளமும் எதிர்த்துப் போட்டியிட்டபோது, ​​கட்சி அணிகளில் பிளவு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக பாஜக யாரையும் முதல்வர் முகமாக காட்டவில்லை.

அதே சமயத்தில் பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு இது நிச்சயமாக இரட்டை வெற்றியாகும். கட்சியின் நல்ல செயல்திறன் அதன் தொண்டர்களை மேலும் வலுப்படுத்த உதவும். மேலும் 2025’ஆம் ஆண்டில் தனியாக செல்லத் தயாராக போதுமான நேரம் இருக்கும். இரண்டாவதாக, ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிராவை இழந்த சில மாதங்களுக்குப் பிறகு இந்த வெற்றி வருவது கட்சியினருக்கு ஊக்கமளிக்கும்.

நிதீஷுக்கு அடுத்து என்ன?
முதல்வரின் பணிக்கு நிதீஷை ஆதரிப்பதாக பாஜக உறுதியளித்திருந்தாலும், எண்களைப் பொருட்படுத்தாமல், அவருக்கு நிறைய ஆபத்து உள்ளது. வாக்கெடுப்பு பிரச்சாரத்தின் கடைசி நாளில்  ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதீஷ் குமார் இது தனது கடைசி தேர்தல் என்று அறிவித்தார். 67 வயதான நிதீஷ், இடையில் 2014-15’ஆம் ஆண்டில் ஒரு வருடத்திற்கும் குறைவான நேரத்தைத் தவிர்த்து, 2005 முதல் மாநிலத்திற்கு தலைமை தாங்குகிறார்.

இதற்கிடையே பீகாரின் எதிர்க்கட்சி, ஆட்சிக்கு எதிரான காரணியை இணைக்க தவறிவிட்டது. மொத்தத்தில் இந்த தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள், தாங்கள் நிதீஷ் குமாருக்கு எதிர்ப்பைக் காட்டினாலும்,  சிறைக்கு சென்ற லாலுவின் வாரிசுகளுக்கு ஆதரவு கொடுக்கவில்லை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளனர்.

Views: - 19

0

0

1 thought on “உடைந்து போன நிதீஷ் குமாரின் பிம்பம்..! அடுத்து என்ன செய்யப்போகிறது பாஜக..?

Comments are closed.