கொரோனா குறைந்ததால் பள்ளி, கல்லூரிகளை திறக்கலாம் : அனுமதியளித்தது பீகார் மாநில அரசு!!

5 July 2021, 5:41 pm
Bihar School Open - Updatenews360
Quick Share

பீகார் : கொரோனா குறைந்ததால் பீகார் மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் அலை காரணத்தால் பீகார் மாநிலத்தில் மே மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனாவின் தாக்கம் குறைய தொடங்கிய பின்னர், ஊரடங்கில் சில தளர்வுகள்அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று பீகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், பீகார் மாநிலத்தில் 50% வருகையுடன் அனைத்து கல்லூரி, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து உயர்நிலை வகுப்பு பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளியில் வேலை பார்க்கும் ஊழியர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுப்படுத்தவும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர்களுடன் வேலைபார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 50% இருக்கையுடன் உணவகங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Views: - 131

0

0