“கூட்டணி இறுதியானது ஆனாலும் சிக்கல்”..! குழப்பத்தில் பீகார் எதிர்க்கட்சிகள்..!

By: Sekar
3 October 2020, 4:05 pm
tejashwi_yadav_updatenews360
Quick Share

பீகாரின் எதிர்க்கட்சியான கிராண்ட் அலையன்ஸ் மாநிலத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளதுடன், கூட்டணிக் கட்சிகளிடையே இடங்களை ஒதுக்குவது குறித்த முறையான அறிவிப்பு இன்று மாலை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராஷ்ட்ரிய ஜனதா தளத் (ஆர்ஜேடி) தலைவரான லாலு பிரசாத்தின் தூதர் போலா யாதவ் வியாழக்கிழமை ராஞ்சியில் இருந்து பாட்னாவுக்கு திரும்பிய பின்னர் தொகுதிப் பங்கீட்டின் வேகம் அதிகரித்தது.

“தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை முறையான அறிவிப்பு வெளியிடப்படும்” என்று ஆர்ஜேடி செய்தித் தொடர்பாளர் மிருத்யூஞ்சய் திவாரி தெரிவித்தார். எதிர்க்கட்சி கூட்டணிக்கு தலைமை தாங்கும் ஆர்.ஜே.டி தவிர, காங்கிரஸ், இடது சாரிகளான சிபிஐ-எம்எல், சிபிஐ மற்றும் சிபிஐ (எம்), விகாஷீல் இன்சான் கட்சி (விஐபி) மற்றும் ஜார்க்கண்டின் ஆளும் கட்சியான ஜேஎம்எம் ஆகியவை விரைவில் நடைபெற உள்ள பீகார் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது.

243 இடங்களைக் கொண்ட பீகார் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு 58-60 இடங்களும், சிபிஐ-எம்எல் 13-15, சிபிஐ மற்றும் சிபிஐ (எம்) ஒட்டுமொத்தமாக 8-10 இடங்களும், பாலிவுட் செட் வடிவமைப்பாளர் முகேஷ் சாஹ்னியின் விஐபி 8-10 மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா இரண்டு இடங்களும் எடுத்துக்கொள்ள மீதமுள்ள இடங்களில் லாலு பிரசாத் கட்சி போட்டியிடும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 

கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக தேஜாஷ்வி யாதவ் கூட்டணித் தலைவர்கள் முன்னிலையில் செய்தியாளர் கூட்டத்தில் தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தை வெளியிடும் போது அறியவிக்கப்படுவார் என்று அவர்கள் தெரிவித்தனர்.

எனினும், தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் தாங்கள் மகிழ்ச்சியடையவில்லை என்றும், கட்சியின் மூத்த தலைவர்கள் யாரும் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொள்ள மாட்டார்கள் என்றும்  என்றும் காங்கிரஸின் வட்டாரங்கள் தெரிவித்தன.

காங்கிரஸ் பொதுச் செயலாளரும் பீகார் பொறுப்பாளருமான சக்திசிங் கோஹில் நேற்று இரவு டெல்லிக்கு திரும்பியுள்ளார். கட்சியின் மாநில பிரிவுத் தலைவர் மதன் மோகன் ஜா, சி.எல்.பி தலைவர் சதானந்த் சிங் ஆகியோரும் இன்று மாலைக்குள் டெல்லியை அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸின் வட்டாரங்கள், குறைந்த எண்ணிக்கையிலான இடங்களை வழங்குவதோடு, கட்சி ஒருபோதும் வெல்லாத தொகுதிகள் வழங்கப்படுகின்றன என புகார் தெரிவித்துள்ளனர்.

சட்டமன்றத்தில் மூன்று எம்.எல்.ஏ.க்களைக் கொண்ட சிபிஐ-எம்எல், முன்னதாக அக்டோபர் 28’ம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவுக்கான 30 இடங்களின் பட்டியலை முறையான அறிவிப்புக்காகக் காத்திருக்காமல் வெளியிட்டது.

இந்நிலையில் உயர்மட்ட தலைவர் தீபங்கர் பட்டாச்சார்யாவின் கூட்டத்திற்குப் பிறகு தற்போது ஆர்ஜேடியுடன் ஒரு புரிதலை எட்டியுள்ளது. வியாழக்கிழமை இரவு தேஜாஷ்வி யாதவுடன், தாங்கள் மகாகத்பந்தனின் ஒரு அங்கமாக இருப்பதை அவர் உறுதிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

“எங்கள் கட்சித் தலைவர் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்வார். அங்கு இடப் பகிர்வு முறையாக அறிவிக்கப்படும்” என்று சிபிஐ-எம்எல் செயலாளர் குணால் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் பத்திரிகையாளர் சந்திப்பில் ஜே.எம்.எம் தலைவர்கள் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“கிராண்ட் அலையன்ஸில் இடங்கள் குறித்த முறையான அறிவிப்பு வெளியான பின்னரே நாங்கள் கருத்து தெரிவிப்போம்” என்று ஜேஎம்எம் தேசிய பொதுச் செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான வினோத் பாண்டே ராஞ்சியில் தெரிவித்தார்.

இதனால் கூட்டணி இறுதி செய்யப்பட்டதாக கூறப்பட்டாலும், காங்கிரசும், ஜே.எம்.எம். கட்சியும் எப்போது வேண்டுமானாலும் கூட்டனிலிருந்து வெளியேறும் என பேச்சுக்கள் உலா வருகின்றன. இது ஆட்சியை பிடிக்கும் கனவில் உள்ள லாலுவின் வாரிசான தேஜஸ்வி யாதவை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Views: - 41

0

0