முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோதி விபத்து : உடல் நசுங்கி 2 இளைஞர்கள் பலி!!

4 July 2021, 11:41 am
Accident 2 dead - Updatenews360
Quick Share

ஆந்திரா : திருப்பதி மலை அடிவாரத்தில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது வேகமாக சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் லாரி மீது மோதியதில் இரண்டு வாலிபர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக மரணமடைந்தனர்.

ஆந்திர மாநிலம் திருப்பதி மலை அடிவாரம் வழியாக சித்தூர் செல்லும் சாலையில் லோடு ஏற்றப்பட்ட லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரியின் பின்புறம் வேகமாக வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது.
விபத்தில் இருசக்கர வாகனம் முழுவதுமாக லாரியின் பின்புறம் சிக்கிக்கொண்ட நிலையில் அதில் பயணித்த இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக மரணமடைந்தனர்.

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த திருப்பதி போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று மரணமடைந்தவர்கள் உடலகலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

Views: - 213

0

0