சிறுவர் பாதுகாப்பில் கலெக்டர்களுக்கு அதிக அதிகாரம்..! புதிய சட்டத் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்..!

Author: Sekar
15 March 2021, 2:31 pm
Parliament_UpdateNews360
Quick Share

சிறுவர் நீதி சட்டத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும்  வகையில், மத்திய அரசு புதிய சட்டத் திருத்த மசோதாவை இன்று மக்களவையில் தாக்கல் செய்துள்ளது. 

இந்த சட்டத் திருத்தத்தின் மூலம், மாவட்ட ஆட்சியர் மற்றும் கூடுதல் மாவட்ட ஆட்சியர்களின் பங்கை அதிகரிப்பதற்காக, சிறுவர் நீதிச் சட்டம் 2015’ஐ திருத்துவதற்கான மசோதா மக்களவையில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. 

இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே, காங்கிரஸ் எம்பி சசி தரூர் இந்த சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். ஆனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி அவர் எழுப்பிய கருத்துக்களை நிராகரித்தார்.

சிறுவர் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) திருத்த மசோதா, 2021 பின்னர் குரல் வாக்கு மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த சட்டத்திருத்தம் நடைமுறைக்கு வரும்போது, , ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் மற்றும் கூடுதல் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் சட்டத்தை செயல்படுத்துவதற்கு பொறுப்பான நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிக்கும் அதிகாரம் பெறுவார்கள்.

மேலும் மாவட்ட ஆட்சியரின் கீழ் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவும் செயல்படும்.

கடந்த மாதம் அமைச்சரவை வழங்கிய ஆலோசனைகளின் அடிப்படையில், குழந்தைகள் நலக் குழுவில் உறுப்பினராவதற்கு முன்பு, நபர்களின் பின்னணி மற்றும் கல்வித் தகுதி குறித்த நிபந்தனைகளும் இந்த சட்டத்திருத்தத்தில் சேர்க்கப்படுகிறது.

Views: - 69

0

0