“எங்களை கேட்காமல் எந்த பரிவர்த்தனையும் கூடாது”..! அமலாக்கத்துறையின் நேரடி கண்காணிப்பில் மார்க்சிஸ்ட் தலைவரின் வாரிசு..!

26 September 2020, 6:47 pm
Bineesh_Kodiyeri_UpdateNews360
Quick Share

கேரள அரசாங்கத்தின் முக்கிய நபர்கள் மற்றும் கட்சியின் துணை நிறுவனங்களின் மோசமான ஒப்பந்தங்கள் மற்றும் பரிவர்த்தனைகள் குறித்து அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ உள்ளிட்ட அமைப்புகள் விசாரணைகளைத் தொடங்கியுள்ள நிலையில் மாநிலத்தின் ஆளும் கட்சியினர் பலரின் தலை மீது கத்தி தொங்கிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

சிபிஐயைத் தொடர்ந்து, அமலாக்க இயக்குநரகம் தற்போது விசாரணைக்குள் நுழைந்துள்ளது. கேரள சிபிஎம் மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணனின் மகன் பினீஷ் கொடியேரி மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ) கீழ் அமலாக்கத்துறையின் கொச்சி அலுவலகம் இந்த வழக்கை பதிவு செய்தது.

பதிவுத் துறைக்கு அமலாக்கத்துறை அனுப்பிய கடிதத்தில், சட்டவிரோத நடவடிக்கைகளின் பிரிவு 16, 17 மற்றும் 18’ன் படி அவர் குற்றங்களைச் செய்ததாக சந்தேகிக்கப்படுவதால், பினீஷின் சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் பரிவர்த்தனை செய்யக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது.

திருவனந்தபுரம் தங்கக் கடத்தல் வழக்கு மற்றும் பெங்களூரில் போதைப்பொருள் கையாளுதல் வழக்கு ஆகிய இரண்டு வழக்குகளையும் நான்கு தேசிய புலனாய்வு அமைப்புகள் விசாரிக்கத் தொடங்கியதிலிருந்தே பினீஷுக்கு சிக்கல் உருவாகத் தொடங்கியது.

இரண்டு வழக்குகளிலும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஒரே நோக்கம் இருக்கிறதா என்று அமலாக்கத்துறை ஆராய்கிறது. ஹவாலா பரிவர்த்தனைகள் நடந்ததாக சந்தேகிக்கப்படும் பெங்களூரு போதைப்பொருள் வழக்கிலும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

போதைப்பொருள் வழக்கில் முக்கிய குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான முகமது அனூப்புடன் பினீஷ் கொடியேரிக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததாக அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளது. பினீஷ், 2014’இல், அனூப் தனது ஹோட்டல் வியாபாரத்தில் உதவினார் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், பினீஷ் மற்றும் அனூப் இடையேயான தொலைபேசி அழைப்புகளும் அமலாக்கத்துறையின் கண்காணிப்பின் கீழ் உள்ளன. சி.டி.ஆர் விவரங்களின்படி, 2020 ஏப்ரல் மாதத்தில் அனூப் பினீஷுடன் 30’க்கும் மேற்பட்ட முறை பேசியிருந்தார்.

இதற்கிடையில், பா.ஜ.க மற்றும் மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்களின் உத்தரவின் பேரில் ஏஜென்சிகள் இந்த வழக்கை பதிவு செய்துள்ளதாகக் கூறி சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு சிபிஎம் தலைமை கண்டனம் தெரிவித்துள்ளது.

Views: - 9

0

0