உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தல் : கூட்டணியை அறிவித்தது பாஜக!!

Author: kavin kumar
19 January 2022, 10:07 pm
Quick Share

டெல்லி: உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் அப்னா தளம் மற்றும் நிஷாத் கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட போவதாக கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் நம் இந்தியாவில் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த ஐந்து மாநிலங்களில் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பது உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் தான்.ஏனென்றால் இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக உத்தரபிரதேசம் காணப்படுகிறது. அங்கு பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் 403 தொகுதிகள் உள்ளன.

இதனால் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள 403 தொகுதிகளிலும் ஏழு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பாஜகவின் மத்திய தேர்தல் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தலைவர் ஜேபி நட்டா, அப்னா தளம், நிஷாத் ஆகிய கட்சிகளோடு இணைந்தது 403 தொகுதிகளிலும் பாஜக போட்டியிடும் என அறிவித்துள்ளார்.

Views: - 312

0

0