தமிழகத்திற்கு சி.டி.ரவி..! கேரளாவுக்கு சி.பி.ஆர்..! பாஜகவில் புதிய மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம்..!

15 November 2020, 6:50 pm
C.T.Ravi_UpdateNews360
Quick Share

பாஜகவின் துணைத் தலைவர் ராதா மோகன் சிங், உத்தரப்பிரதேச மாநிலத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகம், மகாராஷ்டிரா மற்றும் கோவாவின் மாநில பொறுப்பாளராக கட்சியின் பொதுச் செயலாளர் சி.டி.ரவியை பாஜக தலைவர் ஜே.பி.நட்டா நியமித்துள்ளார்.

பொறுப்பாளர் மற்றும் இணை பொறுப்பாளர்களின் பட்டியலில் அடுத்த ஆண்டு தேர்தலுக்கு செல்லும் மாநிலங்களும் அடங்கும். கடந்த செப்டம்பர் மாதம் கட்சியில் ஜே.பி.நட்டா தேசிய அளவில் கட்சியில் நிர்வாகிகளை மாற்றியமைத்தார். இந்நிலையில் தற்போது மாநில பொறுப்பாளர்களும் மாற்றப்பட்டுள்ளனர்.

கட்சியின் பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்ஜியா அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவிருக்கும் மேற்கு வங்கத்தின் மாநில பொறுப்பாளராக தொடர்ந்து நீடிப்பார். மேலும் பாஜக அங்கு ஆட்சிக்கு வருவதற்கான உறுதியான முயற்சியை பாஜக மேற்கொண்டு வருகிறது. அவருக்கு பாஜகவின் ஐடி விங்கின் தலைவரான அரவிந்த் மேனன் மற்றும் அமித் மால்வியா ஆகியோர் உதவுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் துணைத் தலைவர் பைஜயந்த் பாண்டா டெல்லி மற்றும் அசாமின் பொறுப்பாளராக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

துஷயந்த் குமார் கௌதம் உத்தரகண்ட் மாநில பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ரேகா வர்மா இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கௌதம் மேலும் பஞ்சாப் மற்றும் சண்டிகரின் பொறுப்பாளராகவும் இருப்பார்.

ஜம்மு காஷ்மீருக்கான பொறுப்பில் இருந்த ராம் மாதவ் நீக்கப்பட்டு தருண் சுக்கிற்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் மேலும் லடாக் மற்றும் தெலுங்கானாவிற்கும் பொறுப்பாளராக இருப்பார்.

குஜராத்தின் பொறுப்பாளரான பூபேந்திர யாதவ் பீகார் பொறுப்பாளராகவும் இருப்பார். கட்சியின் செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ராவுக்கு மணிப்பூரின் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

கட்சித் தலைவர் டி.புரந்தேஸ்வரி ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் மாநில பொறுப்பாளராக இருப்பார். மேலும் சிங் கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் பொறுப்பாளராக இருப்பார்.

பி.முரளிதர் ராவ் மத்தியப் பிரதேசத்தின் பொறுப்பாளராக இருப்பார். அவருக்கு பங்கஜா முண்டே மற்றும் பிஷ்வேஸ்வர் டுடு ஆகியோர் உதவுவார்கள். அருணாச்சல பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் பொறுப்பாளராக திலீப் சாய்கியா நியமிக்கப்பட்டுள்ளார்.

சிபி ராதாகிருஷ்ணனுக்கு கேரளா மற்றும் அவினாஷ் ராய் கண்ணாவுக்கு இமாச்சல பிரதேச பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

வெளியுறவு இணையமைச்சர் வி.முரளீதரன் தொடர்ந்து ஆந்திராவின் பொறுப்பாளராக இருப்பார். அவருக்கு சுனில் தியோதர் உதவி செய்வார்.

நாகாலாந்தின் பொறுப்பு நலின் கோஹ்லி, திரிபுராவின் பொறுப்பு வினோத் சோங்கர், லட்சத்தீவின் பொறுப்பு அப்துல்லா குட்டி, டாமன், டையூ, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியின் பொறுப்பு விஜயா ரஹத்கர், மிசோரத்தின் பொறுப்பு எம்.ஹொன்லுமோ கிகோன், மேகாலயாவின் பொறுப்பு எம் சுபா ஆ, சிக்கிமிற்கு சுகந்தா மஜூம்தார் மற்றும் அந்தமான் நிக்கோபாருக்கு சத்ய குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ராதா மோகன் சிங்கிற்கு உதவ யூனில் ஓஜா, சத்ய குமார் மற்றும் சஞ்சீவ் சவுராசியா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Views: - 23

0

0