மம்தா பானர்ஜியை கட்டிப்பிடிப்பதாக அச்சுறுத்திய பாஜக தலைவருக்கு கொரோனா உறுதி..! மருத்துவமனையில் அனுமதி..!

2 October 2020, 3:15 pm
anupam_hazra_updatenews360
Quick Share

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டால் அவரை கட்டிப்பிடிப்பதாக அச்சுறுத்திய சில நாட்களுக்குப் பிறகு, பாரதிய ஜனதா தலைவர் அனுபம் ஹஸ்ராவுக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை உறுதிப்படுத்தியது.

திரிணாமுல் கட்சியிலிருந்து பாஜவுக்குத் தாவிய அனுபம் ஹஸ்ராவுக்கு சமீபத்தில் தேசிய செயலாளர் பதவியை பாஜக தலைவர் ஜே.பி.நட்டா வழங்கியிருந்தார்.

இந்நிலையில் கடந்த வாரம், தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கட்டிப்பிடிப்பதாக அச்சுறுத்தி அவர் சர்ச்சையை ஏற்படுத்தினார்.

அவரது சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்குப் பிறகு, திரிணாமுல் காங்கிரஸ் அவர் மீது போலீசில் புகார் தெரிவித்திருந்தது.

இதற்கிடையே பாஜக தலைவர் அனுபம் ஹஸ்ரா கொரோனா அறிகுறிகளை கொண்டிருந்ததை அடுத்து, அவரது மாதிரிகள் கொரோனா சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து அனுபம் ஹஸ்ரா, மேற்கு வங்காளத்தின் தலைநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Views: - 43

0

0