தெலுங்கானா எம்எல்ஏ வீட்டில் தீ வைத்த பாஜகவினர் : கல்லெறிந்து தாக்குதல்!!

1 February 2021, 1:27 pm
Mla Attacke BJP - Updatenews360
Quick Share

தெலுங்கானா : அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக தரப்படும் நன்கொடை நிதி எங்கே போகிறது என்று கேள்வி எழுப்பிய தெலுங்கான சட்டமன்ற உறுப்பினர் வீடு மீது தாக்குதல் நடத்தி தீ வைத்த பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள பரக்காலா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தர்மா ரெட்டி உள்ளார். தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை சேர்ந்த அவர், பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, ராமர் கோவில் கட்டுவதற்காக வழங்கப்படும் நன்கொடை எங்கே போகிறது என்று தெரியவில்லை. பிரதமர் மோடி இந்த நிதி தொடர்பான விவரங்களை வெளியிட ஆவணம் செய்ய வேண்டும் என்ற ரீதியில் பேசி இருந்தார்.

இதனால் ஆவேசம் அடைந்த பாரதிய ஜனதா கட்சியினர் நேற்று இரவு பரக்காலவில் உள்ள எம்எல்ஏ தர்மா ரெடி வீட்டை முற்றுகையிட்டனர். ஜெய் ஸ்ரீ ராம் என்ற கோஷத்துடன் தர்மா ரெட்டி வீடு மீது கற்கள், கட்டைகள், கோழி முட்டை ஆகியவற்றை வீசி தாக்குதல் நடத்தினர்.

மேலும் சட்டமன்ற உறுப்பினர் வீட்டின் காம்பவுண்ட் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டது. இதனால் பரக்காலாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அங்கு வந்த போலீசார், சட்டமன்ற உறுப்பினர் வீடு மீது தாக்குதல் நடத்திய நூற்றுக்கணக்கான பாரதிய ஜனதா கட்சியினர் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்துகின்றனர்.

இந்த நிலையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியினர் அங்குள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தினர். அவர்களையும் கைது செய்ய போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாரதிய ஜனதா கட்சியினருக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக பேசிய தெலுங்கானா மாநில அமைச்சர் கே.டி.ஆர், பொறுப்பான அரசியல் கட்சி என்ற முறையில் நாங்கள் அமைதியாக இருக்கிறோம். பாரதிய ஜனதா கட்சியினர் இதே போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டால் உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று கூறினார்.

Views: - 1

0

0