பாஜக கூட்டணியில் இருந்து பாஸ்வான் கட்சி வெளியேறுமா? பீகாரில் தொகுதிப் பங்கீட்டில் இரு அணிகளிலும் நீடிக்கும் சிக்கல்!!

30 September 2020, 9:32 pm
Paswan- updatenews360
Quick Share

சென்னை : கொரோனா காலத்திற்குப் பின் அமல்படுத்தப்பட்ட கடும் ஊரடங்குக்குப் பின் இந்தியாவில் நடைபெறும் முதல் சட்டமன்றத் தேர்தலில் தொகுதி ஒதுக்குவதில் ஆளும் பாஜக கூட்டணியிலும் எதிர்க்கட்சியான லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரீய ஜனதா தளக்கூட்டணியிலும் கடும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் எதிர்பார்க்கப்படும் முக்கியமான தேர்தலில் கூட்டணிக்கட்சிகளைக் காப்பாற்றிக்கொள்ள இரு அணிகளும் தீவிரமான பேச்சுகளில் ஈடுபட்டுள்ளன. எதிர்க்கட்சிக் கூட்டணியை விட பாஜக கூட்டணியில்தான் பெரும் பிளவுகளும் குழப்பங்களும் நிலவிவருகின்றன.

முதல்வர் நிதீஷ்குமாருக்கு எதிராக கூட்டணியில் இருக்கும் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானின் கட்சியான லோக் ஜனசக்தி போர்க்கொடி உயர்த்தியுள்ளது. பீகாரில் தாழ்த்தப்பட்டவர்களின் ஆதரவைப்பெற்ற லோக் ஜனசக்தி முதல்வர் நிதீஷ்குமாருக்கு எதிராக கடந்த இரண்டாண்டுகளாக பிரச்சாரம் செய்துவந்தது. மீண்டும் அவரை முதல்வராக ஏற்க மாட்டோம் என்று வெளிப்படையாக அறிவித்திருந்தது. தற்போது, அந்த முதல் வெளிப்படையாக வெடித்துள்ளது. அந்தக் கட்சியை சமாதானப்படுத்தி கூட்டணியில் தேவையான இடங்களைப் பெற்றுத்தரவும் கூட்டணி உடையாமல் பார்த்துக்கொள்ளவும் பாஜக தலைவர்கள் சமரசம் பேசிவருகின்றனர்.

Nitish Kumar's JD(U) Formally Joins BJP Led-NDA at the Centre

கூட்டணியை விட்டு வெளியேறித் தனியாகப் போட்டியிட லோக் ஜனசக்தி வேகம் காட்டி வருகிறது. அக்கட்சி கூட்டணியை விட்டு வெளியேறினால் பீகாரில் பாஜக அணிக்குக் கிடைக்கும் தலித் வாக்குகளை அது பிரித்துவிடும். அப்படி நடப்பது எதிர்க்கட்சியான லாலு பிரசாத் யாதவின் கூட்டணிக்கு சாதமாக அமையும்.
எதிர்க்கட்சிக் கூட்டணியிலும் இடங்கள் ஒதுக்குவதில் சிக்கல்கள் உள்ளன.

NDA ally LJP files review against top court's order on SC/ST law - Rajya  Sabha TV

பெருமபான்மையான 143 இடங்களில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரீய ஜனதா தளம் போட்டியிட முடிவு செய்துள்ளது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் காங்கிரசுக்கும் இடதுசாரிகளுக்கும் பகிர்ந்தளிக்க லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் திட்டமிட்டுள்ளார். கூட்டணி அமைப்பதிலும் தொகுதி ஒதுக்கீட்டிலும் சிறப்பாகச் செயல்படும் அணிக்கே வெற்றிவாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.

கொரோனா காலத்திலும் அதைத் தொடர்ந்து ஊரடங்குக் காலத்திலும் நாடு முழுவதும் பாதிப்பு ஏற்பட்ட பிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் பீகார் சட்டமன்றத் தேர்தல் இந்திய அரசியலில் கொரோனா ஏற்படுத்திய மாற்றங்களைக் காட்டுவதாக அமையும். எனவே, இந்தத் தேர்தல் பிரச்சாரத்தையும் முடிவுகளையும் நாடு முழுவதும் உள்ள அரசியல் நோக்கர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ளனர்.

மத்திய அரசின் ஊரடங்கு குறித்தும் அதைத் தொடர்ந்து மத்திய அரசும் பீகார் அரசும் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறியும் வாய்ப்பாக பீகார் சட்டமன்றத் தேர்தல் பார்க்கப்படுகிறது. மேலும், பீகார் தேர்தல் முடிவுகள் தேசிய கட்சிகளின் எதிர்காலத்தையும் அடுத்து தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேசியக்கட்சிகளின் வாய்ப்புகளையும் பாதிக்கும்.

Bihar: Nitish Kumar and Ram Vilas Paswan are looking to form a new Front

அதுமட்டுமின்றி பீகாரில் கட்சிகளுக்குக் கிடைக்கப்போகும் இடங்கள் மாநிலங்களவையில் கட்சிகளின் வலிமையையும் மாற்றியமைக்கும். இதைத் தொடர்ந்து வரும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடனும் காங்கிரசுடனும் கூட்டணி அமைக்கும் கட்சிகளை பீகார் தேர்தல் முடிவுகள் பாதிக்கும். பீகாரில் வெற்றிபெற்றால் வலிமையான நிலையில் பாஜக தமிழகத்தில் களம் இறங்கும்.

Congress And BJP Have Triumphed Over Ayodhya | Countercurrents

கூட்டணி இட ஒதுக்கீடுகளிலும் கடுமையான பேரத்தை மேற்கொள்ளும். காங்கிரஸ் வெற்றிபெற்றாலும் இதுபோல்தான் நடந்துகொள்ளும். மாறாக, பாஜக தோல்வி அடைந்தால் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதனுடன் சேர கட்சிகள் தயங்கும். அதன் பேர வலிமையும் பெருமளவு குறையும். காங்கிரஸ் தோல்வியும் அக்கட்சிக்கு இதே நிலையை ஏற்படுத்தும்.

Views: - 1

0

0