இன்ஷா அல்லா சொல்ல இனிக்குது..! ஜெய் ஸ்ரீராம் சொன்னா கசக்குது..! மம்தா பானர்ஜியின் இரட்டை முகம் அம்பலம்..!
25 January 2021, 1:51 pmமம்தா பானர்ஜி இஸ்லாமிய ஒலிகளை வரவேற்பது மற்றும் ஜெய் ஸ்ரீ ராம் மீது சொன்னால் மட்டும் கோபப்படுவதை காட்டும் வீடியோவை பாரதீய ஜனதா கட்சி வெளியிட்டுள்ளது.
முன்னதாக, கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா நினைவுச்சின்னத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125’வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, கூட்டத்தில் பலர் ஜெய் ஸ்ரீ ராம் எனக் கோஷமிட்டதால், தான் பேச மாட்டேன் எனக் கூறி கோபப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பின்னர் பேசிய மம்தா பானர்ஜி, நேதாஜி பிறந்தநாள் கொண்டாட்டங்களை ஒரு கட்சியின் அரசியல் நிகழ்வாக மாற்றியதாக பாஜகவைக் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் பாஜக வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், மம்தா பானர்ஜி இஸ்லாமிய வரிகளான ‘லா இலாஹா இல்லிலா’, ‘இன்ஷா அல்லா’ போன்றவற்றை மற்றவர்களுடன் சேர்ந்து சொல்வதைக் காணலாம்.
“மம்தா தீதி, ஏன் இத்தகைய போலித்தனம்? இஸ்லாமிய ஒலியை வரவேற்கிறீர்! ஜெய் ஸ்ரீ ராமின் சத்தத்தில் எரிச்சல் அடைகிறீரே!” என பாஜக வீடியோவை டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு கருத்து தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இஸ்லாமிய வாசகங்களை ஒலிப்பதற்கு விரும்பும் மம்தா இந்து மத கோஷங்களுக்கு வெறுப்பு காட்டுவது, இந்து மதம் மீதான அவரின் வெறுப்பை அம்பலப்படுத்தி உள்ளதாகவும், மதச்சார்பின்மை எனும் அவரது வேஷம் இனியும் மக்களிடையே எடுபடாது என்றும் பாஜக ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
0
0