காங்., ஆளும் மாநிலங்களில் மந்தம்… சக்கை போடு போடும் பாஜக : கொரோனா தடுப்பூசி பணிகளில் தடுமாறும் எதிர்கட்சிகள்..!!

Author: Babu Lakshmanan
29 November 2021, 6:01 pm
Corona_Vaccine_UpdateNews360
Quick Share

இந்தியாவில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தடுப்பூசி போட்டுள்ள சதவீதம் மிகவும் பின்தங்கியிருப்பது புள்ளி விபரங்களில் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட பிறகு அதனை கட்டுப்படுத்துவதற்கு தேவையான பல்வேறு நடவடிக்கைகளை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டு வந்தது. அதேவேளையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உயிர்களை காக்கும் விதமாக, கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசி அவசர காலப் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது.

Vaccine Stop- Updatenews360

மேலும், கொரோனா தடுப்பூசிகளை 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், இவ்விரு தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார அமைப்பே அங்கீகாரம் வழங்கிய நிலையிலும், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் தடுப்பூசிக்கு எதிராக கடும் கேள்வி எழுப்பின. இருப்பினும், பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசிகளை போட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்,இந்தியாவில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தடுப்பூசி போட்டுள்ள சதவீதம் மிகவும் பின்தங்கியிருப்பது புள்ளி விபரங்களில் வெளியாகியுள்ளது. அதேவேளையில், பாஜக ஆளும் மாநிலங்களில் தடுப்பூசி போட்டுள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே, தடுப்பூசி செலுத்துவதில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மந்தமாக செயல்பட்டு வருவது இதன்மூலம் தெரிய வந்துள்ளது.

பாஜக ஆளும் மாநிலங்களில் அதிகபட்சமாக இமாச்சல பிரதேசத்தில் 100 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 91.90 சதவீதம் பேர் 2வது தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து கோவாவில் 100 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 87.9% பேர் 2வது தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.

காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மாநிலங்களில், அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 86.6 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 39.4 சதவீதம் பேர் 2வது தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர். திமுக ஆளும் தமிழகத்தைப் பொறுத்தவரையில் 78.1 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 42.65 சதவீதம் பேர் 2வது தவணை தடுப்பூசியும் போட்டுள்ளனர்.

Views: - 248

0

0