சச்சின் இணைந்தால் என்ன..? கெலாட் அரசாங்கம் நீண்ட காலம் நீடிக்காது..! முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே அதிரடி..!

13 August 2020, 5:28 pm
Vasundhara_Raje_UpdateNews360 (2)
Quick Share

சச்சின் பைலட் தலைமையில் பிரிந்து சென்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.’க்கள் மீண்டும் கட்சியில் இணைந்துள்ள நிலையில், மூத்த பாரதீய ஜனதா தலைவரும், ராஜஸ்தான் முன்னாள் முதல்வருமான வசுந்தரா ராஜே, அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் நீண்ட காலம் நீடிக்காது என்று கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் குலாப் சந்த் கட்டாரியாவும் இதே போன்ற உணர்வுகளை எதிரொலித்தார். “சில முடிவுகள் மூலம் காங்கிரசின் முறிவு முடிவடையும்” என்று கூறிய கட்டாரியா மேலும், நாளை தனது கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தை சட்ட சபையில் கொண்டுவர உள்ளதாகத் தெரிவித்தார்.

பாஜக நாளை காலை 9.30 மணிக்கு மாநில சட்டசபையில் சட்டமன்றக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியில் தவறான புரிதல் எதுவாக இருந்தாலும், “மறப்போம் மன்னிப்போம்” என்ற அடிப்படையில் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று கெலாட் சமரச தொனியில் கூறியுள்ளார்.

“மன்னிப்பின் மனப்பான்மையுடன் ஜனநாயகத்தை காப்பாற்ற இந்த போராட்டத்தில் எங்களது அனைத்து சக்திகளையும் நாம் வைக்க வேண்டும், மறந்து முன்னேற வேண்டும்” என்று கெலாட் ட்வீட் செய்துள்ளார்.

கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி தலைமையில் ஜனநாயகத்தை காப்பாற்றுவதே காங்கிரஸின் போராட்டம் என்று அவர் கூறினார். இதற்கிடையில் மூன்று நாட்களுக்கு முன்னர், ஒரு மாத கால நெருக்கடி முடிவுக்கு வந்த போதிலும், கெலாட் மற்றும் பைலட் இருவரும் இதுவரை நேருக்கு நேர் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உயர்மட்ட தலைவர்கள், குறிப்பாக இந்த வார தொடக்கத்தில் பைலட்டை சந்தித்த பிரியங்கா காந்தி வாத்ராவின் தலையீட்டின் பின்னர் அரசியல் நெருக்கடி முடிவுக்கு வந்தது.

Views: - 9

0

0