புனேவில் பிரதமர் மோடிக்கு மார்பளவு சிலையுடன் கோவில்: பாஜக தொண்டரின் அபரிமிதமான பக்தி..!!
Author: Aarthi Sivakumar18 August 2021, 9:16 am
புனே: புனேவில் பிரதமர் நரேந்திர மோடியின் மார்பளவு சிலையுடன் பாஜக தொண்டர் ஒருவர் கோவில் கட்டிய சம்பவம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
மஹாராஷ்டிராவின் புனே நகரைச் சேர்ந்தவர் பா.ஜ.க தொண்டர் மயூர் முந்தே. ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள இவர் அதே பகுதியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மார்பளவு சிலையுடன் சிறிய கோவில் கட்டியுள்ளார்.
இதுகுறித்து மயூர் கூறியதாவது, அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பிரதமருக்கு மரியாதை செலுத்தவே புனேயில் அவருக்கு கோவில் கட்ட முடிவு செய்தேன். ஜம்மு – காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, முத்தலாக் தடை சட்டம் உட்பட பல திட்டங்களை பிரதமர் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார்.
எனவே எனது சொந்த இடத்தில், சொந்த செலவில் சிறிய அளவிலான கோவிலை கட்டி உள்ளேன். இதற்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் செலவாகி உள்ளது. மோடியின் மார்பளவு சிலை மற்றும் கோவில் கட்ட தேவைப்பட்ட சிவப்பு பளிங்கு கற்கள் ஆகியவை ஜெய்பூரில் இருந்து வாங்கி வந்தேன் என அவர் கூறினார். பிரதமர் நரேந்திர மோடிக்கு கட்டப்பட்ட கோவிலை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.
0
0