கொடியேற்றுவதில் மோதல்..! பாஜக தொண்டர் அடித்துக் கொலை..! மம்தா கட்சியினர் அட்டூழியம்..!

15 August 2020, 2:37 pm
BJP_Tirinamool_Clash_UpdateNews360
Quick Share

மேற்கு வங்காளத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் சுதந்திர தினமான இன்று தேசியக் கொடியை ஏற்றுவது தொடர்பாக பாஜகவினருடன் திரிணாமுல் கட்சியினர் மோதலில் ஈடுபட்ட நிலையில், ஒரு பாரதீய ஜனதா கட்சி தொண்டர் ஆளும் திரிணாமுல் காங்கிரஸின் ஆதரவாளர்களால் கொல்லப்பட்டார்.

திரிணாமுல் கட்சியின் ஆதரவாளர்களால் 40 வயதான சுதர்சன் பிரமானிக் அடித்து கொல்லப்பட்டார் என்று பாஜக குற்றம் சாட்டிய நிலையில், மேற்கு வங்க ஆளும் கட்சியான திரிணாமுல் கட்சி, பாஜகவின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. இதற்கிடையே இந்த சம்பவத்திற்கு பின்னர் எட்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த மோதல் ஹூக்ளி மாவட்டத்தில் பதற்றத்தைத் தூண்டியது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அதிகாரிகள் ஒரு பெரிய போலீஸ் பட்டாளத்தை சம்பவம் நடந்த பகுதியில் நிறுத்தி வைத்துள்ளனர்.

“இன்று காலையில் கானாகுலில் இந்தியக் கொடியை ஏற்றியதில் உள்ளூர் மக்களிடையே மோதல் ஏற்பட்டது. மூங்கில் குச்சிகளால் தாக்கப்பட்டதில் ஒருவர் கொல்லப்பட்டார். விசாரணைக்காக எட்டு பேரை நாங்கள் தடுத்து வைத்துள்ளோம்.” என்று ஹூக்ளி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ததகதா பாசு கூறினார்.

இரு கட்சிகளின் தொண்டர்களும் தங்கள் அலுவலகங்கள் ஒரே பகுதியில் அமைந்திருப்பதால், கொடியை ஏற்றுவதற்காக ஒரே இடத்தில் கூடியிருந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். அப்போது பாஜகவினரிடம் திரிணாமுல் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து விரைவில் இரு கட்சிகளின் ஆதரவாளர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர்.

“திரிணாமுல் கட்சியின் ஆட்சியில் இருக்கும் வரை இதுபோன்ற சம்பவங்கள் தொடரும். இன்றுவரை 108 பாஜக தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் ” என்று பாஜக பொதுச் செயலாளர் சயந்தன் பாசு கூறினார்.

இருப்பினும், திரிணாமுல் கட்சியின் தலைவரும் மாவட்டத்தின் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான பிரபீர் கோசல், “வன்முறை மற்றும் இரத்தக்களரியில் திரிணாமுல் கட்சிகையும் இல்லை மற்றும் ஆதரிக்கவும் இல்லை. இது பாஜகவின் இரு பிரிவுகளுக்கு இடையிலான சண்டை என்று கேள்விப்பட்டேன். போலீசார் விசாரிக்கின்றனர்.” எனக் கூறினார்.

முன்னதாக ஜூலை 13’ஆம் தேதி, பாஜக எம்எல்ஏ தேபேந்திர நாத் ராயின் சடலம், வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் ஹேமதாபாத்தில் உள்ள அவரது வீட்டிற்கு அருகிலுள்ள சந்தையில், தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டது. அதன்பிறகு வங்காளத்தில் மேலும் இரண்டு பாஜக தொண்டர்கள் இறந்து கிடந்தனர். 

இவர்கள் அனைவருமே தற்கொலை செய்து கொண்டு தான் இறந்தார்கள் என போலீஸ் தரப்பு கூறி வருகிறது.இதனால் பாஜக தொண்டர்கள் மட்டுமல்லாது பொதுமக்களும் அதிருப்தியடைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், தற்போது மற்றொரு பாஜக தொண்டர் திரிணாமுல் கட்சியினரால் அடித்துக் கொல்லப்பட்டது வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் கட்சியினருக்கு மிகப்பெரும் தலைவலியாக மாறும் எனக் கூறப்படுகிறது.

Views: - 45

0

0