80 வயது மூதாட்டி என்றும் பார்க்காமல் பாஜக தொண்டரின் தாய் மீது கொடூரத் தாக்குதல்..! திரிணாமுல் கட்சியினர் அடாவடி..!
28 February 2021, 8:18 pmமேற்கு வங்காளத்தில் தேர்தல் அறிவித்துள்ள நிலையில் பாஜக மீதான திரிணாமுல் கட்சியினரின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதாகக் கூறப்படுகிறது.
நேற்று பாஜக பிரச்சார வாகனங்களுக்கு தீ வைத்த திரிணாமுல் தொண்டர்கள் பாஜக தொண்டர் ஒருவரின் தாயை கொடூரமாக தாக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாரதீய ஜனதா கட்சியின் தொண்டர் ஒருவர், திரிணாமுல் காங்கிரஸின் தொண்டர்கள் நேற்று வடக்கு 24 பர்கானாவில் தனது தாயைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
பாஜக தொண்டர் கோபால் மஜும்தார் கூறுகையில், நேற்று வடக்கு டிம்டூமில் உள்ள நிம்தாவில் மூன்று திரிணாமுல் கட்சித் தொண்டர்கள் தனது வீட்டிற்குள் நுழைந்து தனது தாயைத் தாக்கியதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
தாக்குதல் குறித்து பேசிய மஜூம்தாரின் தாய், “அவர்கள் என்னை என் தலையிலும் கழுத்திலும் அடித்து குத்தினார்கள். அவர்கள் என் முகத்திலும் அடித்தார்கள். நான் பயப்படுகிறேன். இதைப் பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது என்று அவர்கள் என்னை மிரட்டினார்கள். என் உடல் முழுவதும் வலி உள்ளது.” என்று கூறினார்.
இந்நிலையில் மஜும்தார் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கபப்ட்டுள்ளது.
0
0