அட.. இவரா முதல்வர் வேட்பாளர்..? மாஸ் காட்டும் கேரள பாஜக..! வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

4 March 2021, 5:15 pm
sreedharan_updatenews360
Quick Share

கேரள பாஜக மாநிலத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான முதலமைச்சர் வேட்பாளராக, கட்சியில் இணைந்து ஒரு வாரமே ஆன மெட்ரோமேன் எனப் போற்றப்படும் ஸ்ரீதரனை அறிவித்துள்ளது.

ஸ்ரீதரனை ஆதரித்து, கேரள பாஜக தலைவர் கே.சுரேந்திரன், நாட்டில் மெட்ரோ புரட்சிக்கு பின்னால் இருந்த ஸ்ரீரன், தற்போது மாநிலத்தை விரைவாக அபிவிருத்தி செய்ய உதவுவார் என்று கூறினார்.

மெட்ரோமேன் ஸ்ரீதரன் தலைமையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநிலத்தை ஆள ஒரு வாய்ப்பைப் பெற்றால், “கேரளாவில் பத்து மடங்கு சக்தியுடன் பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் அபிவிருத்திப் பணிகளைச் செயல்படுத்த முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என சுரேந்திரன் கூறினார்.

“அவர் இந்த திட்டத்தை (பலரவட்டம் ஃப்ளைஓவர்) ஐந்து மாதங்களில் எந்த ஊழலும் இன்றி நிறைவு செய்தார். அதனால்தான் ஸ்ரீதரனை தேசிய ஜனநாயக்க் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொண்டோம்” என்று அவர் மேலும் கூறினார்.

பாஜக அமைத்த 16 பேர் கொண்ட மாநிலத் தேர்தல் குழுவில் ஏற்கனவே ஸ்ரீதரன் இடம் பெற்றுள்ளார்.

டெல்லி மெட்ரோவை உருவாக்கிய ஸ்ரீதரன் பிப்ரவரி 25’ஆம் தேதி மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் முன்னிலையில் மலப்புரம் மாவட்டம் சங்கரம்குளத்தில் நடந்த விழாவில் சுரேந்திரன் தலைமையிலான விஜய் யாத்திரையில் முறையாக பாஜகவில் சேர்ந்தார்.

88 வயதான அவர் சமீபத்தில் கவர்னர் பதவியில் ஆர்வம் இல்லை என்று தெளிவுபடுத்தியிருந்தார். இருப்பினும், முதலமைச்சர் பதவி கிடைத்தால் ஏற்க தயாராக இருப்பதாகக் கூறியிருந்தார்.

க.டந்த பல ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகிய இரு கூட்டணிகளே ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், கேரளாவில் பாஜகவுக்கு ஸ்ரீதரனின் நுழைவு ஒரு பெரிய ஊக்கமாக கருதப்படுகிறது.

கேரளாவில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6’ஆம் தேதி ஒரே கட்டத்தில் நடைபெறும். முடிவுகள் மே 2’ஆம் தேதி அறிவிக்கப்படும்.

Views: - 30

0

0