ஊதியம் கேட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் : தனியார் மருத்துவமனை அட்டூழியம்!!

Author: Udayachandran RadhaKrishnan
21 October 2021, 1:47 pm
Ambulance Driver Attacked -Updatenews360
Quick Share

தெலுங்கானா : செய்த வேலைக்கு ஊதியம் கேட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநரை கண்மூடித்தனமாக தாக்கிய மருத்துவமனை நிர்வாகத்தின் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் மேச்சல் மாவட்டத்திலுள்ள கோச்சாரம் நகரில் வஜ்ரா ஹாஸ்பிடல்ஸ் என்ற பெயரில் தனியார் மருத்துவமனை ஒன்று உள்ளது. அங்கு ரமேஷ் என்பவர் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை செய்து வந்தார்.

கடந்த சில மாதங்களாக ரமேசுக்கு மருத்துவமனை நிர்வாகம் சம்பளம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. தன்னுடைய குடும்ப சூழல் காரணமாக அவர் சம்பளத்தை கேட்டுள்ளார். சம்பளம் கொடுக்க மறுத்த மருத்துவமனை நிர்வாகம் அவர் மீது நேற்று இரவு கடுமையாக தாக்குதல் நடத்தியது.

நான்கு பேர் சேர்ந்து ரமேசை கடுமையாக தாக்கி காயப்படுத்தினர். இதனால் ரமேஷின் முகம், இடுப்பு, முதுகு ஆகிய பாகங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. தாக்குதல் நடந்த போது உடன் இருந்த ரமேஷ் மகனையும் அவர்கள் கடுமையாக தாக்கிய காயப்படுத்தினர்.

இரண்டு பேரும் தற்போது அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். தகவலறிந்த போலீசார் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 256

0

0