இமாம் பதவிக்கு ஆசைப்பட்டு வயதான முஸ்லீம் மதகுரு கழுத்தறுத்துக் கொலை..! உ.பி.யில் பயங்கரம்..!

26 February 2021, 5:10 pm
Mosque_UP_UpdateNews360
Quick Share

உத்தரபிரதேசத்தில் 55 வயதான முஸ்லீம் ஒருவர் உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் ஒரு மசூதிக்குள் நுழைந்து 62 வயதான மதகுருவின் தொண்டையை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதற்கட்ட விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு வயதான மதகுருவை மாற்றி விட்டு, தான் அந்த பதவியைக் கைப்பற்ற விரும்பியதாகத் தெரியவந்துள்ளது.

பலியான வயதான மதகுரு பஞ்சாபைச் சேர்ந்த ஜாகீர் என அடையாளம் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். உ.பி.யின் ராம்பூர் மாவட்டத்தில் உள்ள அஜீம் நகர் காவல் நிலையத்தின் எல்லைக்குள் நாகலியா ஆகில் கிராமத்தில் மசூதியின் இமாமாக பணியாற்றி வந்தார். 

இந்நிலையில் உள்ளூர் குடியிருப்பாளரான ஜலீஸ் இமாம் பதவிக்கு ஆசைப்பட்டுள்ளார். நேற்று, ஜலீஸ் மசூதிக்கு வந்து ஜாகீரின் தொண்டையை ஒரு கூர்மையான பொருளால் வெட்டினார். சாகீரை காப்பாற்ற முயன்ற மற்றொரு நபரையும் அவர் தாக்கினார். பின்னர், அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

“நேற்று, குற்றம் சாட்டப்பட்டவர் மசூதிக்கு வந்து மதகுருவை கூர்மையான பொருளால் தாக்கி தொண்டையை அறுத்தார். இதனால் ரத்தவெள்ளத்தில் மிதந்த மதகுரு அந்த இடத்திலேயே இறந்தார்.” என்று ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

காவல்துறையினர், இந்த சம்பவத்திற்குப் பிறகு, குற்றம் சாட்டப்பட்டரைக் கண்டுபிடித்து கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) 302 (கொலை) மற்றும் 307 (கொலை முயற்சி) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Views: - 4

0

0