மத்திய இணை அமைச்சரின் டிவிட்டர் கணக்கில் இருந்து ப்ளூ டிக் நீக்கம் : மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டிவிட்டர்!!

12 July 2021, 12:56 pm
Rajiv Chandrasekar- Updatenews360
Quick Share

டெல்லி : மத்திய இணையமைச்சர் ராஜீவ்சந்திரசேகருக்கு வழங்கிய ப்ளூ டிக்கை டிவிட்டர் நிறுவனம் திரும்பப்பெற்றது.

ட்விட்டரை பயன்படுத்தும் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோரின் கணக்கை உறுதி செய்ய அந்நிறுவனம் ப்ளு டிக் வசதியை அளிக்கும். இருப்பினும், கடந்த 2017ஆம் ஆண்டு முதல் சில காரணங்களுக்காக ப்ளூ டிக் வெரிபிகேஷன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. சுமார் 3 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த ப்ளூ டிக் வெரிபிகேஷனை ட்விட்டர் நிறுவனம் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மோடி அமைச்சரவை பொறுப்பேற்றவுடன் 2 ஆண்டுகள் பிறகு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதில், 43 அமைச்சர்களின் பட்டியல் வெளியானது. இவர்கள் ஜனாதிபதி மாளிகையில் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்த விரிவாக்கத்தில் தமிழக பாஜக தலைவர் எல் முருகன் இணையமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், புதியதாக மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்ற மத்திய இணை அமைச்சர் ராஜீவ்சந்திரசேகருக்கு வழங்கிய ப்ளூ டிக் அங்கீகாரத்தை டிவிட்டர் திரும்பப்பெற்றது.

ஏற்கனவே துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர்களின் டிவிட்டர் கணக்குளில் உள்ள ப்ளூ டிக் நீக்கப்பட்டது பெரும் சர்ச்சைக்குள்ளானது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் ப்ளு டிக் நீக்கப்பட்டது சர்ச்சையானது. இந்த நிலையில் மத்திய இணையமைச்சர் ராஜீவ்சந்திரசேகருக்கு வழங்கிய ப்ளூ டிக்கை டிவிட்டர் நிறுவனம் திரும்பப்பெற்றது குறிப்பிடதக்கது.

Views: - 130

0

0