கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பாலிவுட் நடிகை பூனம் பாண்டே உயிரிழந்ததாக நேற்று செய்திகள் வெளியான நிலையில், தற்போது புது தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகையும், மாடல் அழகியமான பூனம் பாண்டே காலமானதை அவரது மேனேஜர் சமூக வலைதளத்தில் உறுதி செய்துள்ளார். 32 வயதான நடிகை பூனம் பாண்டே நிஷா என்ற திரைப்படம் மூலமாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து இந்தி, கன்னடா, தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.
2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா வென்று கோப்பையை கைப்பற்றினால் நிர்வாணமாக கடற்கரையில் ஓடுவேன் என்று பரபரப்பாக அறிவித்து சர்ச்சையையும் கிளப்பினார்.
இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு, தன் காதலன் சாம் பாம்பெயை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், கர்ப்பப்பை புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த இவர், இதற்கான சிகிச்சையை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.
பூனம் பாண்டே மரணம் அடைந்த செய்தி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், பூனம் பாண்டேவின் சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பேசும் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அதில், “நான் உயிருடன் தான் இருக்கிறேன். நான் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் இறக்கவில்லை. துரதிருஷ்டவசமாக, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் உயிரிழக்கும் நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான பெண்களைப் பற்றி என்னால் சொல்ல முடியாது என்பதால் இதைச் செய்தேன்.
எனது இறப்புச் செய்தி அறிந்து கண்ணீர் சிந்தியவர்களுக்காக நான் வருந்துகிறேன். நான் காயப்படுத்தியவர்களிடம் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். எனது நோக்கம்: கர்ப்பப்பை புற்று நோய் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே ஆகும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.