காபூலில் மசூதியை குறி வைத்து வெடிகுண்டு தாக்குதல் : பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்!!!

Author: Udayachandran RadhaKrishnan
3 October 2021, 6:31 pm
Bomb Blast - Updatenews360
Quick Share

காபூல் மசூதி அருகே குண்டுவெடிப்பு நிகழ்வில் பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஆட்சி புரிந்து வரும் தலிபான்கள்,எல்லைகளுக்கு குறிப்பாக பதாக்ஷான் மாகாணத்தில் தற்கொலை படையை உருவாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை உறுதி செய்யும் வகையில்,தற்கொலை படைக்கு லஷ்கர்-இ-மன்சூரி என்று பெயரிடப்பட்டு,நாட்டின் எல்லைகளுக்கு அனுப்பப்படும் என்று பதாக்ஷான் மாகாணத்தின் துணை ஆளுநர் முல்லா நிசார் அஹ்மத் அஹ்மதி முன்னதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஈத் காஹ் மசூதியின் நுழைவாயில் அருகே குண்டுவெடிப்பு நடந்ததாக தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வெடிவிபத்தில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும்,மக்கள் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? என்ற எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

Views: - 382

0

0