நொய்டாவில் மருத்துவமனைக்கு வெளியே வெடிகுண்டு..? போலீஸ் குவிப்பு..!

22 January 2021, 12:53 pm
Bomb_Like_Structure_Found_Noida_UpdateNews360
Quick Share

உத்தரபிரதேச மாநிலம் நொய்டா செக்டர் 63’இல் உள்ள மருத்துவமனைக்கு வெளியே இன்று காலை வெடிகுண்டு போன்ற ஒரு பொருள் கண்டறியப்பட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கவுதம் புத்தா நகரின் பிரிவு 63 பகுதியில் சந்தேகத்திற்கிடமான சாதனம் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அறிக்கையின்படி, நொய்டாவின் பிரிவு 63’இல் உள்ள ஒரு மருத்துவமனைக்கு வெளியே சாலையில் சந்தேகத்திற்கிடமான தொகுப்பு காணப்பட்டது. அதைத் தொடர்ந்து காவல்துறையினரும் வெடிகுண்டு நிபுணர் குழுவும் சம்பவ இடத்திற்கு விரைந்தன. பின்னர் இந்த சாதனம் அப்பகுதியிலிருந்து அகற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

“நாங்கள் அந்த பகுதியை சுற்றி வளைத்தோம். நிபுணர் குழுக்கள் இங்கு வந்தன. முதலில், இது வெடிபொருள் போலத் தெரியவில்லை. ஆனால் பின்னர் வெடிகுண்டு நிபுணர் குழு வந்து இதை செயலிழக்கச் செய்தது.” என்று கவுதம் புத்தா நகர் போலீஸ் கமிஷனர் அலோக் சிங் கூறினார்.

நொய்டா பிரிவு 27’இல் உள்ள கைலாஷ் மருத்துவமனைக்கு அடையாளம் தெரியாத நபரிடமிருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்த ஒரு நாள் கழித்து இந்த சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக பிரிவு 27’இல் உள்ள கைலாஷ் மருத்துவமனையின் லேண்ட்லைன் எண்ணை ஒருவர் அழைத்து, கட்டிடத்தின் அடித்தளத்தில் ஒரு குண்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததாக, ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

“போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக மருத்துவமனைக்கு வந்துவிட்டன. மேலும் கட்டிடத்தில் உள்ள சந்தேகத்திற்கிடமான அனைத்து பொருள்களும் சோதனை செய்யப்பட்டது. பின்னர் இது ஒரு மோசடி அழைப்பு எனத் தெரிய வந்தது.” என்று நேற்றைய சம்பவம் குறித்து நொய்டாவின் கூடுதல் போலீஸ் கமிஷனர், ரன்விஜய் சிங் தெரிவித்தார்.

“இது தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் அழைப்பாளரைக் கண்டறிய முயற்சிகள் நடந்து வருகின்றன” என்று அவர் மேலும் கூறினார்.

Views: - 0

0

0