காதலனுக்கு திருமணம்..மண்டபத்தில் போராடிய காதலி : செருப்பால் அடித்து விரட்டிய மணமகன் வீட்டார்..வேடிக்கை பார்த்த போலீஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
16 April 2022, 5:47 pm
Lover Marriage Stop -Updatenews360
Quick Share

காதலனுக்கு திருமணம் நடப்பதை அறிந்து மண்டபத்துக்கு சென்ற காதலியை செருப்பால் அடித்து விரட்டிய மணமகனின் உறவினர்களின் வீடியோ இணையத்தில் ரைவலாகி வருகிறது.

தெலங்கானா மாநிலம் கம்பம் நகரில் உள்ள பைபாஸ் சாலையில் அமைந்துள்ள திருமண மண்டபம் ஒன்றில் ஸ்ரீநாத் என்பவருக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. திருமண முகூர்த்தத்திற்கு சற்று நேரத்திற்கு முன் அங்கு வந்து சேர்ந்த அதே ஊரை சேர்ந்த இளம்பெண் ரஜினி திடீரென்று திருமண மண்டபம் முன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் என்னை விரட்டி விரட்டி காதலித்த ஸ்ரீநாத் இப்போது வேறு ஒரு பெண்ணுக்கு தாலி கட்டுவதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று கூறினார்.

இதனால் ஆவேசமடைந்த மணமகனின் உறவுப் பெண்கள் ரஜினியின் முடியை பிடித்து தரதரவென்று இழுத்து வெளியில் தள்ளினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் ஒருவர் நடந்த சம்பவத்தை வேடிக்கை கூட பார்க்காமல் தன்னுடைய செல்போனை நோண்டிக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் ஸ்ரீநாத்க்கு நிச்சயக்கப்பட்ட முகூர்த்தத்தில் திருமணம் நடைபெற்று முடிந்தது. இதுபற்றி ரஜினி அளித்த புகாரின் பேரில் கம்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 673

0

0