மீன் பிடிக்க சென்ற சிறுவர்கள் வெள்ளத்தில் சிக்கிய காட்சி!!

17 September 2020, 5:17 pm
Boys Rescue- updatenews360
Quick Share

தெலுங்கானா : மீன்பிடிக்க சென்ற சிறுவர்கள் வெள்ளத்தில் சிக்கி கொண்டதையடுத்து ஜேசிபி இயந்திரம் மூலம் மீட்ட காட்சி வைரலாகி வருகிறது.

தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டம் ஏகாங் கிராமத்தை சேர்ந்த இரண்டு சிறுவர்கள் மீன் பிடிப்பதற்காக தங்கள் ஊர் அருகில் ஓடும் ஓடைக்கு சென்று மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

கடந்த இரண்டு நாட்களாக தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து நதிகள், ஆறுகள், காட்டாறுகள், ஓடைகள் ஆகியவற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்தநிலையில் அந்த சிறுவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சிக்கிக்கொண்டனர்.
இதனை கவனித்த அந்த வழியாக வந்தவர்கள் ஜேசிபி இயந்திரம் ஒன்றை வரவழைத்து சிறுவர்களிடம் ஒரு முனையை தூக்கிப்போட்டு, கயிற்றை சிறுவர்கள் உடலில் கட்ட செய்து, மறுமுனையை ஜேசிபி எந்திரத்தில் கட்டி அந்த சிறுவர்களை மீட்டனர்.

Views: - 10

0

0