பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை..! பிரிக்ஸ் நாடுகளுக்கு இந்தியா அழைப்பு..!

17 November 2020, 5:59 pm
Narendra_Modi_BRICS_Summit_UpdateNews360
Quick Share

பிரதமர் நரேந்திர மோடி இன்று வீடியோ கான்பெரன்ஸ் மூலம் நடந்த பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாட்டில் உரையாற்றினார். அப்போது ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் (யு.என்.எஸ்.சி), சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) மற்றும் உலக வர்த்தக அமைப்பு (டபிள்யூ.டி.ஓ) ஆகியவற்றில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வதன் அவசியத்தை வாதிட்டார். பிரிக்ஸ் என்பது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்காவை உள்ளடக்கியது.

இன்று “உலகளாவிய ஸ்திரத்தன்மை, பகிரப்பட்ட பாதுகாப்பு மற்றும் புதுமையான வளர்ச்சி” என்ற தலைப்பில் ரஷ்யா நடத்தும் 12’வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் வீடியோ கான்பெரன்ஸ் முறையில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியது குறிப்பிடத்தக்கது. 

பாகிஸ்தானைப் பற்றிய வெளிப்படையான குறிப்பில், பிரதமர் மோடி பயங்கரவாதம் மிகப்பெரிய சவால் என்றும், பயங்கரவாத குழுக்களை ஆதரிக்கும் நாடுகளுக்கு எதிராக செயல்பட பிரிக்ஸ் அங்கத்தினருக்கு அழைப்பு விடுத்தார்.

“பயங்கரவாதம் இன்று உலகின் மிகப்பெரிய பிரச்சினையாகும். பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பையும் ஆதரவையும் வழங்கும் நாடுகளும் சமமாக குற்றம் சாட்டப்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும். இந்த சவாலை நாம் கூட்டாக எதிர்கொள்கிறோம்” என்று பிரதமர் தனது உரையில் கூறினார்.

கொரோனா தொற்றுநோய்களின் போது சர்வதேச சமூகத்திற்கு இந்தியாவின் பங்களிப்பைக் குறிப்பிடுகையில், இந்தியாவின் மருந்தியல் துறையின் வலிமை காரணமாக, ஊரடங்கு காலத்தில் 150’க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்துகளை வழங்க முடிந்தது என்று பிரதமர் கூறினார்.

இந்தியாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசி உற்பத்தி மற்றும் விநியோக திறன் மனிதகுலத்திற்கும் அதே வழியில் உதவும் என்று அவர் பிரிக்ஸ் நாடுகளுக்கு உறுதியளித்தார்.

2021’ஆம் ஆண்டில் இந்தியா பிரிக்ஸ் தலைவராக பொறுப்பேற்கவுள்ள நிலையில், பிரிக்ஸ் நாடுகளில் டிஜிட்டல் ஆரோக்கியம் மற்றும் பாரம்பரிய மருத்துவத்தை தனது நாடு ஊக்குவிக்கும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

Views: - 22

0

0