அண்டாவில் சென்று திருமணம் முடித்த தம்பதி! வைரலான புகைப்படம்…!!

Author: Udhayakumar Raman
18 October 2021, 10:22 pm
Quick Share

கேரளாவில் பெய்து வரும் கனமழை, வெள்ளத்தின் காரணமாக திருமணம் மண்டபத்துக்கு சமையல் பாத்திரத்தில் சென்ற ஜோடியின் புகைப்படம் வைரலாகி வருகிறது

கேரளாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது. பத்தனம்திட்டா, எர்ணாகுளம், கோட்டயம், இடுக்கி, திரிச்சூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கும் ரெட் அலார்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்தது. அதேபோல், திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கையும் விடப்பட்டது.தொடர் கனமழையால் கேரளாவில் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால், நீர் நிலைகளுக்கு அருகில் மக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டது. குறிப்பாக தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று மாநில பேரிடர் மேலாண்மை நிர்வாகம் எச்சரித்துள்ளது.

கேரளாவில் பெய்து வரும் கனமழையை தொடர்ந்து, இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் கடந்த 16ந்தேதி ஒருவர் பலியானார். இதேபோன்று, கோட்டயம் மற்றும் இடுக்கியில் நிலச்சரிவு ஏற்பட்டது. தில் சிக்கிய 12 பேரை காணவில்லை. எனினும், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினரால் சம்பவ பகுதிக்கு செல்ல முடியவில்லை. கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை நேற்று 23 ஆக உயர்ந்திருந்தது. இந்த நிலையில், கேரளாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை இன்று 35 ஆக உயர்ந்து உள்ளது. அவர்களில் 22 பேர் கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் ஏற்பட்ட இரு நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்து உள்ளனர். பல்வேறு வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும், சேற்றில் புதைந்தும் போயுள்ளன.2 அடுக்குகள் கொண்ட வீடு ஒன்று ஆற்றில் அடியோடு விழுந்து மூழ்கியது.

சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்து உள்ளன. மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளன. பல்வேறு அணைகள் நிரம்பி வருகின்றன. 12க்கும் மேற்பட்டோரை காணவில்லை. அவர்களில் பெருமளவிலானோர் குழந்தைகள் ஆவர். இதனால் பலி எண்ணிக்கை உயர கூடும் என அஞ்சப்படுகிறது.இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் நடக்க உள்ள திருமணங்களையும் தடபுடலாக நடத்த முடியாமல், பலரும் தவித்து வருகின்றனர்.அந்த வகையில் ஒரு மணமக்கள் புதுவழியை தேர்ந்தெடுத்து, திருமண மண்டபத்துக்கு சென்றுள்ளனர்.இந்த மணமக்கள் இருவருமே செங்கனூர் மருத்துவமனையில் சுகாதார பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.. இவர்கள் பெயர் ஆகாஷ் மற்றும் ஐஸ்வர்யா.. இவர்களுக்குதான் இன்றைய தினம் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதற்காக தளவாடி என்ற பகுதியில் உள்ள கோயிலில் திருமணத்தை நடத்தவும் முடிவு செய்திருந்தனர்.

அந்த நேரம் பார்த்துதான் எதிர்பாராமல் இப்படி ஒரு வெள்ளம் வந்துவிட்டது. இதனால் திருமண ஜோடி ஒன்றை வெள்ளம் நிறைந்த சாலைகளில் ஒரு பெரிய அலுமினிய சமையல் பாத்திரத்தில் அமர வைத்து திருமண வீட்டார் அழைத்துச் சென்றனர். அதன்பின்னர், மண்டபத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக இந்த திருமணத்தில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்றனர். கனமழை காரணமாக திருமணம் தள்ளி போவதை விரும்பாத அவர்கள், சுமார் 500 மீட்டர் தூரம் சமையல் பாத்திரத்தில் பயணம் செய்து திருமணம் செய்து கொண்டதாக அந்த புதுமணத் தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

Views: - 251

0

0