திருமணத்தன்று பலியான மணமகள்.. பிரிவை நினைத்து அழுததால் வந்த வினை

7 March 2021, 1:06 pm
Quick Share

திருமணம் முடிந்ததும், தனது குடும்பத்தை விட்டு புகுந்த வீடு செல்ல வேண்டும் என்ற சோகத்தில் நீண்ட நேரம் அழுத மணமகள், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒடிசா மாநிலம் பலங்கீர் மாவட்டத்திலுள்ள, டெட்டல்கான் கிராமத்தைச் சேர்ந்த பிசிகேசன் என்பவருக்கும், சோனேபூர் மாவட்டம் ஜூலுண்டா கிராமத்தைச் சேர்ந்த குப்தேஸ்வரி சாஹூ என்பருக்கும் கடந்த வியாழக்கிழமை திருமணம் நடந்தது. திருமண நிகழ்வுகள் அனைத்தும் முடிந்த பின், மணமகளை, மாமியார் வீட்டிற்கு அனுப்பும் சடங்கு, சம்பிரதாயங்கள் நடந்துள்ளன.

அப்போது முதல், தனது குடும்பத்தை விட்டு பிரிய வேண்டுமே என நினைத்து கொண்டிருந்த மணமகள், அழ துவங்கியிருக்கிறார். அவரது அழுகை நீண்ட நேரம் நீடித்திருக்கிறது. தேம்பி தேம்பி அழுத அவர், ஒருகட்டத்தில் திடீரென மயங்கி சரிந்தார். அருகில் இருந்தவர்கள் சாதாரண மயக்கம் தான் என எண்ணி, முகத்தில் தண்ணீர் அடித்து எழுப்ப பார்த்திருக்கிறார்கள். ஆனால் அவரது மயக்கம் தெளியவில்லை.

உடலில் அசைவும் இல்லாததால் பதறிப்போன குடும்பத்தினர், குப்தேஸ்வரியை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அதிகமாக அழுத காரணத்தால், மாரரடைப்பு ஏற்பட்டு, குப்தேஸ்வரி இறந்துவிட்டார் என தெரிவித்தனர். இதனால் திருமணத்திற்கு வந்த உறவினர்களும், ஊர் மக்களும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

மணமகன் நிலைமையோ அந்தோ பரிதாபம்! தாலி கட்டிய மனைவி அன்றைய தினமே இறந்துவிடுவார் என கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார்.

Views: - 40

0

0