சீன எல்லையில் இடிந்து விழுந்த பாலம்..! ஐந்து நாட்களில் மறு கட்டமைப்பு..! அசத்திய அரசு நிறுவனம்..!

30 June 2020, 12:49 pm
Bailey_Bridge_BRO_UpdateNews360
Quick Share

இந்தோ-சீனா எல்லையில் இருந்து சுமார் 65 கி.மீ தூரத்தில் இடிந்து விழுந்த பெய்லி பாலத்தை பார்டர் ரோட்ஸ் ஆர்கனைசேஷன் (பி.ஆர்.ஓ) ஐந்து நாட்களில் மறு கட்டமைப்பு செய்துள்ளது. சனிக்கிழமை காலை முன்சியாரி நகரமான பித்தோராகரில் புதிய பாலம் மீண்டும் திறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய பாலம் ஜூன் 22 அன்று பழைய பாலத்தின் அருகே கட்டப்பட்டது. ஜேசிபி’யை ஏற்றிச் சென்ற டிரெய்லர் பாலத்தை கடக்க கடக்க முயன்றதை அடுத்து கடந்த 22’ம் தேதி இடிந்து விழுந்தது. இந்தோ-சீனா எல்லைக்கு அருகிலுள்ள இராணுவம் மற்றும் ஐ.டி.பி.பி வீரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவதில் முக்கியமான இந்த பாலம், அதன் சரிவுக்குப் பிறகு பல்வேறு கிராமங்களில் வசிக்கும் சுமார் 7,000 பேரை துண்டித்துவிட்டது.

“பழையது இடிந்து விழுந்த சுமார் ஐந்து நாட்களில் 120 அடி நீளமுள்ள புதிய பெய்லி பாலத்தை நாங்கள் கட்டியுள்ளோம். புதிய பாலம் மூலம், சுமார் 15 கிராமங்களுக்கான இணைப்பை வழங்கும். இன்று காலை 11 மணி முதல் மீட்டமைக்கப்பட்டுள்ளது.” என்று அப்பகுதியில் பணிபுரியும் பி.ஆர்.ஓ அதிகாரி பி.கே.ராய் கூறினார்.

ராய் மேலும் கூறுகையில், “ஜோஹர் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள இந்தோ-சீனா எல்லைக்கு அருகே பாதுகாப்புப் படையினர் தங்கள் நிலைகளுக்கு சென்றடைய இந்த பாலம் உதவிகரமாக உள்ளது.” என்றார்.

இதற்கிடையே பாலம் இடிந்து விழுந்த நேரத்தில், மற்றொரு பாலத்திற்கான கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருந்தன. பி.ஆர்.ஓ அதிகாரியின் புகாரின் பேரில் காயமடைந்த டிரெய்லர் ஓட்டுநரை அலட்சியமாக வாகனம் ஓட்டியதற்கும், சேதத்தை ஏற்படுத்தியதற்கும் ஜூன் 23 அன்று போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Leave a Reply